வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

Misleading இலங்கை | Sri Lanka

வங்கியால் வழங்கப்படும் வைப்புத் தொகை மீதான வட்டிக்கான வரி 10% வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்தோம்.

எனவே இது தொடர்பில் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா? என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருந்தமையையும் காணமுடிந்தது.

தெளிவுபடுத்தல் (Explanation)

சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசங்காத்தின் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சில திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பிலான விடயங்களை கடந்த 18 ஆம் திகதி  ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

இதன்போது வங்கி வைப்புத்தொகை மீதான வட்டிக்கு அறவிடப்படும் நிறுத்தி வைத்தல் வரியை  5% முதல் 10% வரை அதிகரிக்க IMF உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை 150,000 மாதாந்த வருமான வட்டி பெறுபவர்களுக்கு மாத்திரமே இந்த வரி விதிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் வழமையான முறைமையின் கீழ் 150,000 ரூபாவிற்கும் குறைவான வட்டியைப் பெறுபவர்களும் நிறுத்தி வைத்தல் வரியை செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாக இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளதாகவும், இந்த பிரிவின் மூலம் எந்தவொரு பிரஜையும் தங்கள் வரி நிலை குறித்த தகவல்களைச் அறிந்துகொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாதத்திற்கு 150,000 ரூபாவிற்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் நிறுத்தி வைத்தல் வரியை அறவிடாமல் இருத்தல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மூலம் குறைந்த வரி விகிதங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது என்பனவே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களுக்கு உடனடியாக ஆலோசனை வழங்குவதற்கான பொறிமுறையொன்று கொழும்பிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான கிளையிலும், அனைத்து மாகாணங்களிலும் உள்ள கிளைகளிலும் ஏற்படுத்தப்படும் எனவும், அதனால் எவருக்கும் பாரபட்சம் இன்றிய சேவைகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும் வரி வலையமைப்பிற்கான வரி பொறிமுறையை விரிவுபடுத்தும் திறனை மாத்திரமே அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்த்துள்ளதாகவும், மேலும் குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் மேலதிக வரியை அறவிட வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார இதன்போது உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்வையிடவும் 

Link | Link 

நிறுத்தி வைத்தல் வரி வரம்புகளை மீளாய்வு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும  விளக்கமளித்துள்ளார்.

இந்த  வரியானது  இறுதி வரி அல்ல எனவும் வருமான வரி விலக்கு வரம்பான 150,000 இற்கு  மேல் வரி செலுத்துவோர் குறைக்கப்பட்ட வரித் தொகையை வைத்திருந்தால் அந்த கூடுதல் வரியை செலுத்தும் போது செலுத்தப்படும் நிறுத்திவைப்பு வரியின் அளவை குறைக்க முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்

அத்துடன், அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் மூத்த பிரஜைகள் இதன் மூலம் 150,000  வரை வரி செலுத்தத் தேவையில்லை எனவும் 150,000 க்கு குறைவான வரி வரம்பில் மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களை இந்த வரியில் இருந்து விடுபடுவதற்கான முழு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த காணொளி பின்வருமாறு

https://www.youtube.com/watch?v=ZBmiaFf8cyw

நிறுத்தி வைத்தல் வரி தொடர்பில் அறிந்துகொள்ள Link

நிறுத்தி வைக்கும் வரி குறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் விளக்கம்

இது தனிப்பட்ட நபருக்கான வட்டி அல்ல எனவும் அதாவது மாத வட்டி வருமானம் 150,000 க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே  இது பொருந்தும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்

மாதாந்தம் 150,000 இற்கும் அதிகமான வட்டி வீதத்தைப் பெறுவதற்கு பொதுவாக 2 கோடியே 25 இலட்சம் அல்லது 22.5 மில்லியன் வைப்புத் தொகை இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர் இது சாதாரண மக்களைப் பாதிக்காது என தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஒருவரின் வருமானம் 150,000க்கு குறைவாக இருந்தால் இறைவரித் திணைக்களத்துடன் கலந்துரையாடி அவர்களின் அனுமதி பெற்று வரியை அறவிடாத சூழ்நிலைக்கு செல்லும் திட்டம் அரசு தரப்பில் இருப்பதாக கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் நடைமுறை சாத்தியப்பாடுகளை பொருத்தே இது சாமானியர்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது  தீர்மானிக்கப்படும் எனவும்,  தனிநபர்கள் தங்களின் வருமானம் குறித்த உண்மை அறிக்கைகளை சமர்ப்பித்து, இந்த வரிகளுக்கு அவை பொருந்தாது என்பதை விளக்கி, அதைக் குறைப்பதைத் தவிர்க்கும் வகையில் செயல்பட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இவ்வாறான ஒன்றை நடைமுறைப்படுத்துவது ஓய்வு பெற்றவர்களுக்கோ அல்லது சிரமத்துடன் வாழ்பவருக்கோ நன்மை பயக்கும் என்றும் சிறு வருமானம் பெறுவோருக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் விடயத்தில் எந்த அடிப்படை தன்மைகளும் இல்லை  எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிடுகின்றார்.

அனைத்து வைப்பு கணக்குகளிலிருந்தும் 10% நிறுத்திவைத்தல் வரி அறவிடப்படுமா?

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத நிறுத்தி வைத்தல் வரியை வங்கிகள் வழமையான முறையின் கீழ் அறவிடுவதாக கடந்த 26 ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வரி செலுத்த தேவையற்றவர்களிடமிருந்து இந்த பொறிமுறையின் கீழ் வரி அறவிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை மீள வழங்குவதற்கான நடைமுறையை அரசாங்கம் முன்வைக்கும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் தெரிவித்த விடயங்கள் தொடர்பான காணொளி பினவருமாறு

வரி தொடர்பான ஆலோசகர் சுமுது விதானகே

நாம் இது தொடர்பில் வரி தொடர்பான  ஆலோசகர் சுமுது விதானகேவிடம் வினவியபோது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஒவ்வொரு வங்கி வைப்பாளரிடமிருந்தும் நிறுத்தி வைத்தல் வரியை அறவிடுவது தற்போதைய முறை என அவர் தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய 5% நிறுத்தி வைத்தல்  வரியை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 10% ஆக அதிகரிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் 150,000க்கும் அதிகமான வட்டி வருமானம் உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே இந்த 10% நிறுத்திவைத்தல்  வரியை அறவிடவுள்ளதாகவும், குறைந்த வட்டி வருமானம் உள்ளவர்களிடமிருந்து இந்த வரியை அறவிடாமல் இருப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய 150,000 இற்கும் குறைந்த வட்டி வருமானம் உள்ளவர்களிடம் அதிகரிக்கப்பட்ட 10% நிறுத்தி வைத்தில் வரியை அறவிடக்கூடாது எனவும் அவ்வாறு அறவிடப்பட்டவர்களின் வரியை மீள் வழங்குவதற்கும் அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கும் நெறிமுறைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்கினும் அவ்வாறான செயன்முறைகள் இன்றும்  நடைமுறைக்கு வரவில்லை எனவும், இப்போது இருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய வட்டி வருமானம் எவ்வளவாக இருந்தாலும் இந்த வரி அறவிடப்படுவதாகவும், ஆனால் எதிர்கால திட்டங்களுக்கமைய குறைந்த வருமான வட்டியை பெறுபவர்களிடம் இந்த வரியை அறவிடாமல் இருப்பதற்கான நடைமுறைகளை இறைவரித் திணைக்களம் சமர்ப்பிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த முறைகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

விளக்கம்

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சாதாரண முறையின் கீழ், அனைத்து வைப்பாளர்களிடமிருந்தும் இந்த நிறுத்தி  வைத்தல் வரி அறவிடப்படும் என்பது தெளிவாகிறது. ஆனால் 2025 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல் இந்த நிறுத்தி வைத்தல்  வரி 10% ஆக அதிகரிக்கப்படும் என்றும், 150,000க்கு மேல் மாத வட்டி வருமானம் பெறுபவர்களிடமிருந்து மாத்திரமே இந்த 10% வரியை அறவிட முடியும் என்றும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஆனால் மாதாந்த வட்டி வருமானம் 150,000 ரூபாவிற்கும் குறைவாக உள்ளதாகத் தகவல்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்த 10% நிறுத்தி வைத்தல்  வரி செலுத்துவதில் இருந்து விலக முடியும் என்றும் அது தொடர்பான முறையான அமைப்பு எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் என்றும், வைப்புத்தொகையில் வாழும் எவருக்கும் பாரபட்சம் இன்றி ஒரு சாதகமான சூழ்நிலை இதன் மூலம் உருவாகும் எனவும் அரசாங்கத்தின் கூற்றின் படி புலனாகின்றது.

குறிப்பு: இந்த கட்டுரையானது தற்போதைய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட விளக்கக் கட்டுரை மாத்திரமே தவிர எந்த சமூக ஊடக பதிவுகளின் தரப்படுத்தல்களுக்கும் உட்படுத்தப்படாது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *