
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கைகலப்பில் ஈடுபடுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த காணொளியில் சந்திரவியாழன் கூட்டணியாண்டோய் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.15 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் உண்மையில் கைகலப்பில் ஈடுப்பட்டிருக்கும் பட்சத்தில் அது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளையும் பிரதான ஊடகங்களில் காணமுடியவில்லை.
அத்துடன் குறித்த காணொளியை பார்த்தவுடன் அந்த காணொளியில் அவர்களின் உடல் அசைவுகள் செயற்கையாக காணப்பட்டமையினால் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது.
மேலும் நாம் அந்த காணொளி தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்த போது இது கடந்த 2025.03.15 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்களை வைத்து செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு தொடர்பான செய்தி அறிக்கையிடல் பின்வருமாறு
சிவநேசத்துரை சந்திரகாந்தன்
மேலும் நாம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வில் அவ்வாறான எந்தவொரு கைகலப்புகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் இருவரும் கைகலப்பில் ஈடுபடுவதுபோல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி போலியானது என்பதுடன், குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் கைகலப்பில் ஈடுபட்டனரா?
Fact Check By: suji shabeedharanResult: False
