
ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) மூலம் 2017 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொற்றுநோய் ஒத்திகை குறித்து விவாதித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் மின்னஞ்சல் கசிவு! உலகையே உலுக்கிய COVID-19 பெருந்தொற்றுக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் துலங்குமா?
(Names Referenced in the Epstein Files – The evidence has not been proven.)
அதிர்ச்சித் தகவல்: சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு மின்னஞ்சல் ஆதாரம், உலகையே உலுக்கிய COVID-19 பெருந்தொற்றுக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
2017-ஆம் ஆண்டிலேயே ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் லாரி கோஹன் (Larry Cohen) ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களில் “Strain Pandemic Situation” (ஒரு பெருந்தொற்று சூழல்) குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்: பில் கேட்ஸ் நிறுவனம் எப்ஸ்டீனுக்கு வழங்க வேண்டிய 5 முக்கிய “Deliverables” (செயல்படுத்த வேண்டியவை) பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதனால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என்ற கெள்வி எழுந்துள்ளது.
5-வது குறிப்பு, பில் கேட்ஸ் மற்றும் கோஹன் ஆகியோருக்கு வரவிருக்கும் பெருந்தொற்று பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் “உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் CDC-யை இதில் எப்படி அதிகாரப்பூர்வமாக இணைப்பது என்பது பற்றி விவாதிப்போம்… இதை நாம் வெற்றிகரமாகச் செய்வோம் என்று நம்புகிறேன்” என பில் கேட்ஸ் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதன் மூலம் WHO மற்றும் CDC தொடர்பு அம்பலமாகியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் பல முக்கிய கேள்விகள் எழுகின்றன.
1. செயற்கை பெருந்தொற்றா?: COVID-19 மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்து வரும் நிலையில், இந்த 2017-ஆம் ஆண்டு மின்னஞ்சல்கள் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
2.
3. அந்த மறைக்கப்பட்ட பெயர் யார்?: இந்த ஆவணங்களில் ஒரு பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மறைக்கப்பட்டுள்ளது (Redacted). அது அந்தோணி ஃபௌசியாக (Anthony Fauci) இருக்க வாய்ப்புள்ளதா?
4. மன்னிப்பு வழங்கப்பட்டது ஏன்?: பெருந்தொற்று தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அந்தோணி ஃபௌசிக்கு அதிபர் பைடன் தரப்பில் மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது ஏன்?
ஆவணத்தைப் பார்க்க: Justice.gov File Link (EFTA02657725)
https://www.justice.gov/…/DataSet%2011/EFTA02657725.pdf
இந்தத் தகவல்கள் உண்மையானால், நாம் சந்தித்து வரும் உலகளாவிய சுகாதார நெருக்கடிகளின் பின்னால் மிகப்பெரிய சதி மறைந்திருக்கலாம். இது குறித்த உங்கள் கருத்து என்ன?
முக்கிய குறிப்பு:
இந்த மின்னஞ்சல் ஆதாரங்களின் உண்மைத்தன்மை மற்றும் முழுமையான பின்னணி இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. என தெரிவிக்கப்பட்டு குறித்த தகவலானது 2026.02.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக உடகங்களிலில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார் இவர்
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் என்ற செல்வந்த நிதி முகாமையாளர் (செல்வந்தர்களின் நிதி முகாமையாளராக பணியாற்றிய) அமெரிக்காவைச் சேர்ந்தவர். பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறு வயது சிறுமிகளை கடத்தல்/கடத்தல் வலையமைப்பில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் காரணமாக அவர் பரவலாக அறியப்பட்டார்.
அவருக்கு பிரபலமான அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல பிரபலங்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும், அவருக்கு எதிரான வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு, விசாரணைக்கு முன்னிலையாக வேண்டிய நிலையில் இருந்தபோது, அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் நியூயோர்க் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக தற்கொலையாகத் தீர்மானிக்கப்பட்டாலும், அது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.
எனினும், 2026 ஜனவரி 30ஆம் திகதியன்று அமெரிக்க நீதித்துறை (DOJ) “எப்ஸ்டீன் கோப்புகள்” என அழைக்கப்படும், எப்ஸ்டீனைச் சேர்ந்த மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த ஆவணங்களில் எப்ஸ்டீன் மற்றும் பில் கேட்ஸ் இடையே தொற்று நோய் பரவலை கணினி மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாதிரியாக பரிசோதித்ததாகக் கூறப்படும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் உள்ளன என்ற வதந்திகள் பரவத் தொடங்கின.
கொவிட் தொடர்பாக இவ்வாறான மின்னஞ்சல் பரிமாற்றம் அவர்களுக்கிடையில் நடந்ததாக செய்திகள் சர்வதேச பிரதான ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை முதலில் நாம் ஆராய்ந்தோம். ஆனால், அந்த வகையில் எந்தச் செய்தியும் வெளியிடப்பட்டதாகக் காண முடியவில்லை.
20026 ஜனவரி 30ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட “எப்ஸ்டீன் கோப்புகளில் என்ன இருந்தது?
Anadolu Agency வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட இந்த ஆவணங்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள் உள்ளன. அவற்றில் மின்னஞ்சல்கள், தொடர்பு பட்டியல்கள், நேர்காணல் சுருக்கங்கள் மற்றும் உள்ளக குறிப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த கோப்புகளில் 2013 ஜூலை மாதத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கே எழுதிக் கொண்டு, ஒருபோதும் அனுப்பப்படாத(draft emails) மின்னஞ்சல்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பில் கேட்ஸ் குறித்து உறுதிப்படுத்தப்படாத சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், அதாவது திருமணத்திற்கு பின்னரான தொடர்புகள், நோய் குறித்த குற்றச்சாட்டுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் வெளியிடப்பட்ட ஆவணங்களை முழுமையாக பரிசோதித்தபோது, தொற்று நோய் பரவலை கணினி மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாதிரியாகச் சோதித்தது, வைரஸ் வடிவமைப்பு, அல்லது சுகாதார தொடர்பான எந்த விவாதமும் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்ததாகக் காட்டும் ஆதாரம் எதுவும் இல்லை.
Forbes உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஊடக நிறுவனங்களும் இந்த ஆவணங்களை நேரடியாக ஆய்வு செய்துள்ளன. அதில், கோவிட் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அவை உறுதிப்படுத்துகின்றன.
பில் கேட்ஸின் கருத்து
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதை அடுத்து, பில் கேட்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் ” வேடிக்கையானதுடன் அவை முற்றிலும் தவறானவை” என்று பில் கேட்ஸ் செய்தித் தொடர்பாளர் Business Insider இடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ஆவணங்களில் இருந்து எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நீண்டகால தொடர்பில் இல்லை என்பதில் ஏற்பட்ட ஏமாற்றம் மாத்திரமே வெளிப்படுகிறது என்றும், பில் கேட்ஸ் முன்பே எப்ஸ்டீனை சந்தித்தது ஒரு பெரிய தவறாக தன்னால் உணரப்பட்டதாகவும், அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் வைரஸ் அல்லது தொற்று நோய் பரவலை சோதித்தமை குறித்த எந்த தகவலும் இருக்கின்றதா?
நாம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணத் தொகுப்பில் “pandemic”, “simulation”, “virus”, “COVID”, “strain”, “health emergency” போன்ற முக்கிய சொற்களை பயன்படுத்தி, கொவிட் தொற்று நோயை பில் கேட்ஸ் உடன் தொடர்புபடுத்தும் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்று ஆராய்ந்தோம்.
இந்த பரிசோதனையின் மூலம், பில் கேட்ஸ் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையே தொற்று நோய் அல்லது வைரஸ் சோதனை, அல்லது பொதுச் சுகாதார திட்டங்கள் தொடர்பான எந்த ஆவணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்து ஆவணத்தை இங்கே காணலாம்
இந்த ஆவணத் தொகுப்பு தொடர்பில் BBC நடத்திய ஆய்வில் இந்த கோப்பில் அரசியல்வாதிகள் தொடர்பான கடித பரிமாற்றங்கள், எப்ஸ்டீனின் மனநிலை தொடர்பான அறிக்கைகள், Ghislaine Maxwell தொடர்பான தகவல்கள், மற்றும் முன்பு வெளியிடப்படாத குரல் பதிவுகள், வீடியோ தரவுகள் என்பன குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
Event 201 மற்றும் தொற்று நோய் சூழ்நிலைத் தயாரிப்பை தவறாக புரிந்துகொள்ள காரணமான அம்சங்கள்
சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் “strain pandemic simulation” (ஒரு வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தொற்று நோய் மாதிரிப்பயிற்சி) என்ற வாக்கியம், 2019 அக்டோபர் மாதம் நடைபெற்ற Event 201 என்ற பொதுஜன தொற்று நோய் தயாரிப்பு பயிற்சியுடன் தவறாக தொடர்புபடுத்தி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த பயிற்சியை Bill & Melinda Gates Foundation போன்ற பல நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தாலும், Reuters மற்றும் USA Today போன்ற சர்வதேச ஊடகங்கள், இதை COVID-19 திட்டமிடலோ அல்லது உருவாக்கலோ அல்ல என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பொதுமக்களுக்கு முன்னால் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டவை, மேலும் இது ஒரு தொற்று நோய்க்கான தயாரிப்பு மற்றும் பதிலளிப்பு பயிற்சி மாத்திரமே அத்துடன் இதற்கு எப்ஸ்டீனுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தெளிவாக உணரப்படுகிறது.
Read in English : No Evidence Epstein Files Show Bill Gates Discussed “Strain Pandemic Simulation” With Jeffrey Epstein
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆயு்வின் அடிப்படையில், 2026 ஜனவரி 30ஆம் திகதியன்று அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், எந்தவொரு வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தொற்று நோய் பரிசோதனைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
உறுதிப்படுத்தப்படாத தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான சில ஆவணங்கள் மட்டுமே உள்ளன. தொற்று நோய் திட்டமிடல், வைரஸ் மாதிரிப்பயிற்சி, அல்லது சுகாதார தொடர்பான எந்தவொரு விவாதங்கள் பற்றியும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:எப்ஸ்டீன், கொவிட் தொற்றுநோய் ஒத்திகை தொடர்பில் பில் கேட்ஸுடன் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரா?
Fact Check By: Suji ShabeedhranResult: Missing Context


