உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் கள்ளவேல செய்றதுல மட்டும் எங்கடவன மிஞ்ச யாருமே இல்ல என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த தகவலானது சிங்கள மொழியிலும் அதிகளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
அவற்றில் உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளைக் கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்த Priyan Pushpakumara என Meta நிறுவனம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று Meta நிறுவனத்தில் அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் வெயிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பதைனை நாம் உறுதிப்படுத்தினோம்.
மேலும் பிரியன் புஷ்பகுமார அல்லது வேறு யாராவது அதிக பேஸ்புக் கணக்குகளைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக Meta நிறுவனமோ அல்லது அதன் சட்டப்பூர்வ Meta பிரதிநிதிகளோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது எனது ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டது.
குறித்த சமூக ஊடகப்பதிவில் Metaவின் இணை தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்த Adrian Cheng மெட்டாவுடன் தொடர்புடைய முகவர் அல்ல, மாறாக ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தொழிலதிபர் என்பதுடன் New World Development இன் தலைமை நிர்வாக அதிகாரி என்பதுவும் கண்டறியப்பட்டது. மேலும் அவர் ஒருபோதும் Metaவின் இணை தலைவராக செயற்பட்டவர் அல்ல என்பதுவும் உறுதியானது.
பல தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகளை உருவாக்குவதற்கு எதிரான கொள்கைகளை Meta பின்பற்றுகிறது
Meta நிறுவனத்தினால், பயனர்கள் தங்கள் பிரதான கணக்கிலிருந்து நிறுவன நோக்கங்களுக்காக தனித்தனியாக கூடுதல் கணக்குகளை உருவாக்க அனுமதிக்கப்படுகின்றது, இருப்பினும் பேஸ்புக்கின் சமூக தரநிலைகள், பயனர்கள் ஒரே ஒரு தனிப்பட்ட கணக்கை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கின்றன, இந்த கூடுதல் கணக்குகளும் ஒரே ஒரு கணக்கு மூலம் நிர்வகிக்கப்படுகின்றன, இது பயனர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளைப் பிரிக்க உதவுகிறது. Link
அதன்படி, தனிப்பட்ட பயனர்கள் எத்தனை கணக்குகளை உருவாக்குகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய எந்த ஒரு கணக்கெடுப்பையும் Meta ஒருபோதும் நடத்தவில்லை என்பது மேலும் தெளிவாகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மையான பின்னணி என்ன?
CNBC செய்தியில் Meta நடத்திய கருத்துக்கணிப்பு குறித்துக் கூறியுள்ளதாக பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் நாம் ஆராய்ந்தோம், அதன்போது, ஜூலை 17, 2024 அன்று CNBC தொலைக்காட்சியின் உத்தியோகப்பூர்வ YouTube பக்கத்தில் “Meta sets big AI advertising goals” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் ஒரு காட்சியே இவ்வாறு எடிட் செய்து உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது.
இதன் உண்மையான காணொளியில் CNBC செய்தி வாசிப்பாளர்கள் Metaவின் விளம்பரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உத்திகளைப் பற்றி விவாதிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. தவிர அதில் பல Facebook கணக்குகள் தொடர்பிலோ அல்லது 2004 முதல் Meta நடத்திய கணக்கெடுப்பைப் பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
உண்மையான செய்தியின் காணொளியை இங்கே காணலாம்
உண்மையான மற்றும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களின் வேறுபாடுகளை காண்க
பிரியன் புஷ்பகுமாரா மற்றும் அவர் தொடர்பான சமூக ஊடகப் பதிவு
பிரியன் புஷ்பகுமார ஒரு இரத்தினக் கல் வியாபாரி மற்றும் இலங்கையின் பணக்காரர்களில் ஒருவர் என்பதுடன், அவர் ஒரு சமூக ஊடக ஆர்வலரும் ஆவார். மேலும் பிரியன் புஷ்பகுமார பெயரில் பல புதிய பேஸ்புக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட மற்றும் கேலிக்கையான பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் உலகில் அதிக பேஸ்புக் கணக்குளை வைத்திருப்பவராக இலங்கையின் பிரியன் புஷ்பகுமாரவை Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக பகிரப்படும் பதிவு முற்றிலும் போலியானது என்பதுடன், அது குறித்து CNBC செய்தியில் தெரிவிக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதுவும் கண்டறிப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியவர் இலங்கையர் என Meta அறிவித்ததா?
Fact Check By: Suji ShabeedhranResult: False
