
பேஸ்புக் குழுவினரால் அனுப்பப்படும் தகவல் என தெரிவித்து சில காலமாக வட்ஸ்அப் வழியாக தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே இது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் முக்கியமான அறிவிப்பு.
உங்கள் பக்கம் எங்களுடைய பொது தரநிலைகளை கடுமையாக மீறியுள்ளது. இதனால் உங்கள் பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்,
1. வேறொருவரின் தொழில் போலியான பெயர்/படத்தைப் பயன்படுத்துதல்.
2. பயனர்களைப் புண்படுத்தும் மற்றும் எரிச்சலூட்டும் மொழி.
3. பிற பயனர்களை அவமதித்தல் மற்றும் இனவெறியைக் காட்டுதல்.
இதுபிழை இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்கள் Facebook கணக்கை நீக்குவதற்கு முன்பு அதைச் சரிபார்க்க உங்கள் தகவலைப் புதுப்பிக்கவும். உதவ முடியும்.
கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்:
இதைச் செயல்படுத்த 24 மணிநேரம் ஆகும், நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.நாங்கள் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வோம். நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் வரை உங்கள் விவரங்களை மாற்ற வேண்டாம். நமக்கு தேவையான எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு நிரந்தரமாக மூடப்படும்.
பேஸ்புக் ஆதரவு குழு. என சிங்கள மொழியில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.08.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் தற்போது இது அனைத்து பயனாளர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருவதுடன், தமிழில் சிலர் இது உண்மையா என்பதனை கண்டறியுமாறு குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில் உடனடி மற்றும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற விதத்திலேய குறித்த செய்தி பகிரப்பட்டிருந்தது. அந்த செய்தியில் சிவப்பு எச்சரிக்கை, அவதானம் போன்ற வார்த்தைகளை் உபயோகப்படுத்தியிருப்பதனால், பயனாளர்கள் மத்தியில் அது அச்சத்தை ஏற்படுத்ததுகிறது.
அதன் மூலம் அவர்கள் இந்த செய்திக்கு பதில் வழங்குவதற்கு தூண்டப் படுகின்றமையும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
மேலும் குறித்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் பயனர்களின் தரவுகள் அதில் கோரப்படுகின்றமையையும் காணமுடிந்தது.
எந்தவொரு சூழ்நிலையிலும் Facebook, கணக்கு தொடர்பான எச்சரிக்கைகளை WhatsApp வழியாக பகிராது மற்றும் கணக்குகளைச் சரிபார்க்க தெளிவற்ற, சரிபார்க்கப்படாத இணைப்புகளைப் பயன்படுத்தாது. Facebook இலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் Facebook செயலியில் (APP) அல்லது “facebook.com” டொமைனில் (domain) இருந்து மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பப்படும்.
Facebook இற்கு முறைப்பாடு செய்தல்
மேற்குறிப்பிடப்பட்ட சமூக ஊடக பதிவில் வழங்கப்பட்ட தகவல்கள் Facebook தொடர்பான ஃபிஷிங் மோசடியுடன் (phishing scam) தொடர்புடையவை என்பதால், மேலும் தகவலுக்கு மற்றும் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைச் சரிபார்க்க உத்தியோகபூர்வ Facebook தளத்திற்கு சென்று தகவல்களை சரிபார்க்க முடியும்.
phishing மற்றும் கணக்கு தொடர்பான பாதுகாப்பு பற்றி அறிந்துகொள்ள Facebook இல் வழங்கப்பட்டுள்ள சில இணைப்புகள் பின்வருமாறு
Facebook உதவி மையம்
- ஃபிஷிங் மற்றும் மோசடிகளுக்கு:Avoid Spam and Scams Link
- Facebook- பாதுகாப்பு பக்கம்: Facebook Security Link
- Facebook இற்கு பிரச்சினையை முறைப்பாடு செய்ய: Report a Problem to Facebook
- ஃபிஷிங் முயற்சியை நீங்கள் சந்தேகித்தால், இந்த இணைப்பு வழியாக நேரடியாக Facebook இற்கு முறைப்பாடு செய்யலாம்.. அதை அணுக இங்கே கிளிக் செய்யவும் – Reporting a Violation or Infringement of Your Rights
WhatsApp இற்கு முறைப்பாடு செய்ய
- WhatsApp வழியாக வரும் இது போன்ற இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
- இந்த செய்தியை ஒரு மோசடி செய்தியாகப் WhatsApp இற்கு முறைப்பாடு செய்யவும்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த தகவலானது போலியானது என்பதுடன் இது மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவதற்கான மோசடிச் செயல் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக ஊடக பயனர்களை அச்சத்திற்குள்ளாக்கி, அவர்களின் தகவல்களைத் திருட முயற்சிக்கும் போலி செய்திகளில் வழங்கப்பட்ட போலி இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அத்தகைய செய்திகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதற்கு உத்தியோகபூர்வ பக்கங்களை (official channels) மாத்திரம் பயன்படுத்தவும்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:Facebook கணக்கை நீக்குவதாக தெரிவித்து WhatsApp ஊடாக பகிரப்படும் தகவல் உண்மையா?
Fact Check By: suji shabeedharanResult: False
