நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்ததா ?
INTRO :
நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “சத்தமில்லாமல் பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்ட நடிகை சாய் பல்லவி …… வெளியான புகைப்படங்கள் ………😮😮👇👇 “ என கடந்த இம்மாதம் 21 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (21.09.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது கடந்த 2023 மே மாதம் நடைபெற்ற SK 21 தமிழ் சினிமா பூஜையின்போது எடுக்கப்பட்டதாகும். சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு இன்னமும் தலைப்பு அறிவிக்கப்படாத சூழலில், SK 21 என்ற பெயரில் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. Raaj Kamal Films International இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் Rajkumar Periasamy படப் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, நடிகை சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.
குறித்த பதிவில் இருந்த ஒரு புகைப்படத்தினை எடுத்தே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை எம்மால் காணக்கிடைத்தது.
இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தினை நாம் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
மேலும் நடிகை குறித்த செய்திற்கு மறுப்பு தெரிவித்து தனது X (டுவிட்டர்) சமூகவலைத்தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்தது என பரவி வருகின்ற புகைப்படமானது SK 21 தமிழ் சினிமா பூஜையின் போது எடுக்கப்பட்டதாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.