INTRO :
தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா என்ற ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Sujeewa Kumar என்ற பேஸ்புக் கணக்கில் ” தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா! இச்செய்தியை பெருமையுடன் அனைவருக்கும் பகிர்வோம்.” என இம் மாதம் 17 ஆம் திகதி (17.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

அவுஸ்ரேலியாவின் தேசிய மொழி என்ன என்பதை நாம் முதலில் ஆய்வு செய்தோம்.அதன் போது, அங்கு உத்தியோகப்பூர்வ மொழியில்லை எனவும் அவஸ்ரேலிய ஆங்கிலமே 80 வீதமானோர் உபயோகிப்பதாக பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

britannica.com| Archived link

Nationsonline | Archived link

worldatlas.com | Archived link


நாம் கூகுளில் is tamil national language in Australia என்று தேடிய போது, இந்தியா டைம்ஸின் பெங்களூரூ மிரர் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறு என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதில் அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்டேட் மெம்பர் (State Member for Prospect) ஹக் மெக்டோர்மோட் தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் இவ்வாறு வதந்தி பரவியது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த நிகழ்வு எப்போது நடந்தது, அதற்கான ஆதாரம் எதையும் அளிக்கவில்லை.

இது தொடர்பாக கூகுளில் தேடியபோது 2016ம் ஆண்டு செய்தி வெளியானது தெரியவந்தது.

அந்த செய்தியில், “அவுஸ்ரேலிய கல்வி அமைச்சர், செனடர் சிம்மன் பர்மீங்ஹாமிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை ஹக் மெக்டோர்மோட் முன் வைத்துள்ளார்” என்று இருந்தது. அவுஸ்ரேலியாவில் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது என்று எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

தமிழ் மட்டுமின்றி இந்தி, பஞ்சாபி, பெர்ஷியன், மெக்டோனியன் ஆகிய ஐந்து மொழிகளை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

sbs.com.au | Archived link

tamil.oneindia.com | Archived link

kalaignarseithigal.com | Archived link

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய, அவுஸ்ரேலியாவின் உத்தியோகப்பூர்வ தேசிய மொழி என்று எதுவும் இல்லை. ஆனால், ஆங்கிலமே தேசிய மொழியாக இருந்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தமிழை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில்,ஐந்து மொழிகளுள் ஒன்றாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தமிழ் இரண்டாவது மொழியாக பயிற்றவிக்கப்பட உள்ளது என இந்திய இணையத்தளமான கலைஞர் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழை தேசிய மொழியாக அவுஸ்ரேலியா அறிவித்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் கடந்த ஆண்டே ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த அவுஸ்ரேலியா; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: False