
INTRO :
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் ஜனாதிபதி இராணுவ சீருடையுடன் யுத்தம் செய்ய யுத்தக்களம் புகுந்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” *#தலைவன்!
வெற்றியோ தோல்வியோ அது இரண்டாம் பட்சம்…
ஆனால் தலைவன் என்பவன் இறுதிவரை #களத்தில் இருக்க வேண்டும்…
இராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கிய #உக்ரைன் #ஜனாதிபதி!
#பெருமைப்படுகின்றோம், ஏனென்றால் எங்களுக்கும் இறுதிவரை மண்டியிடாது களத்திலிருந்த மானத் #தலைவன் #இருந்தான்!
#ukraine #UkraineRussiaCrisis “ என இம் மாதம் 25 ஆம் திகதி (25.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த அனைத்து புகைப்படங்களும் கடந்த வருடத்தில் உக்ரைன் மாநிலங்களில் பணியில் இருந்த இராணுவ வீரர்களை சந்திக்க அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelenskyy சந்திக்க சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என கண்டறியப்பட்டது.




எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில் யுத்த களம் புகுந்த உக்ரைன் ஜனாதிபதி என பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.