
INTRO :
இலங்கை அரசியலில் மிக நீண்ட வரலாற்றினை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தமிழர் கைவசமாகியது என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Suppiah Ananda Kumar என்ற பேஸ்புக் கணக்கில் இது குறித்தான செய்திகள் பல பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது குறித்த செய்திகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக, இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவினால், இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.
ஶ்ரீகொத்தாவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளருக்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளராகவும் எஸ்.ஆனந்தகுமார் செயற்படவுள்ளதாக நியமன கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ என இம் மாதம் 04 ஆம் திகதி (04.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இந்த நியமனங்கள் தொடர்பாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என்று நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, அவ்வாறான செய்திகள் எதுவும் பதிவாகியில்லை என கண்டறியப்பட்டது.
ஆகவே எமது குழுவினர் இது தொடர்பாக மேலதிக ஆய்விற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான ருவான் விஜேவர்தனவை தொடர்புக்கொண்டோம்.
இரத்தினபுரி மாவட்டத்தின் அமைப்பாளரான ஆனந்த குமார் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பகிரப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது என்றும், அவருக்கு இரத்தினபுரி மாவட்டத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் என்ற நியமனமே இம்மாதம் வழங்கப்பட்டதாக எமக்கு தெரிவித்தார்.
மேலதிக தகவல்களுக்கு நாங்கள் ஐ.தே.க ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு இது குறித்து வினவிய போது, சமூக ஊடகங்களில் பரவுகின்ற செய்திகள் பொய்யானவை என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளராகவே ஆனந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் ஐ.தே.க ஊடகத் தலைவர் பதவிக்கு எந்தவொரு நபரையும் நியமிக்கவில்லை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவின் மேற்பார்வையில் மத்திய ஊடகப் பிரிவு ஊடாகவே ஊடக ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் இது குறித்தான ஊடக தெளிவூட்டல் அறிக்கையினையும் ஐ.தே.க வெளியிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதில் ஊடகங்கள் தொடர்பாக விசாரனைக்கு Dinouk Colombage மற்றும் Shanuka Karunaratne இருவரை தொடர்புக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவி வருகின்ற ஐ.தே.க தலைவர் ருவான் விஜேவர்தன, ஆனந்த குமாருக்கு ஒரு கடிதத்தைக் கொடுக்கும் புகைப்படத்தில் உள்ள கடிதம் தொடர்பாக நாங்கள் ஐ.தே.க ஊடகப் பிரிவிடம் விசாரித்தோம். அவர்கள் எங்களுக்கு கொடுத்த கடிதத்தின் நகல் கீழே உள்ளது.

குறித்த கடித்தினை நாம் வாசித்த போது இதனால் தவறான புரிதல் எழுந்துள்ளது என்பது தெளிவாகிறது. அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆனந்த குமார ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தின்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அத்தியாவசிய விஷயங்களுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள வாக்காளர்களின் ஊடக மேலாண்மையின் பொறுப்பாளராக திரு ஆனந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இது குறித்து நாங்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவிடம் விசாரித்தோம், அவர்கள் கட்சியில் ஊடகத் தலைவர் என்ற பொறுப்பு இல்லை என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஊடகங்கள் ஐ.தே.க தொடர்பாக விசாரிக்க தினூக் கொலம்பகே மற்றும் ஷானுக கருணாரத்ன ஆகியோரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பாக அறிவித்த போதிலும், ஆனந்த குமாரின் முகநூல் கணக்கில் எந்த விளக்கமும் காணப்படவில்லை, எனவே இந்த விஷயத்தில் அவரது கருத்துக்களைப் பெற நாங்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் பயனளிக்கவில்லை.
இதற்கமைய இது முற்றிலும் போலியாக உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய ஊடகப் பிரிவு பொறுப்பாளரா ?
Fact Check By: Nelson ManiResult: Explainer