
ஜெர்மனியில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை என்று ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Lucky Suresh என்ற பேஸ்புக் கணக்கில் ” “நெற்றிக்கண்”ஜெர்மனி நாட்டில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை” என்று இம் மாதம் 11 ஆம் திகதி (11.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு புகைப்படத்தினை google reverse image tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.
குறித்த தேடலின் போது எம்மை போன்ற சில உண்மை கண்டறியும் நிறுவனங்கள் குறித்த காணொலி தொடர்பாக மேற்கொண்டிருந்த ஆய்வறிக்கைகள் காணக்கிடைத்தது.
அதில் குறித்த வீடியோவானது போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாம் மேற்கொண்ட சோதனையில், காணொலியினை ஒவ்வொரு நொடியும் நன்கு கவனித்தோம். அப்போது குறித்த குழந்தையின் இடது கண்ணை வெட்டி வீடியோ வடிவமைப்பின் ஒரு யுத்தியினை பயன்படுத்தி மூன்றாவது கண்ணாக அவர்கள் வடிவமைத்துள்ளமை காணக்கிடைத்தது.
மூன்று கண்களுடன் குழந்தை பிறந்ததாக எந்தவிதமான செய்தியும் நம்பகத்தன்மையான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.
இதற்கமைய மூன்று கண்களுடன் ஜெர்மனியில் பிறந்த குழந்தை என வெளியான பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மூன்று கண்களுடன் ஜெர்மனியில் பிறந்த குழந்தை என வெளியான பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:ஜெர்மனியில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை; உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: False