ஆயுதம் ஏந்தினாரா முன்னாள் உக்ரைன் அழகி அனஸ்டாஸியா ?

Misleading சர்வதேசம்

INTRO :
உக்ரைனின் முன்னாள் அழகி அனஸ்டாஸியா ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் என ஒரு செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஆயுதம் ஏந்தினார் முன்னாள் உக்ரைன் அழகி அனஸ்டாஸியா.!

ரஷ்யாவின் பிடியிலிருந்து தங்கள் தாயகத்தை விடுவிக்க உக்ரைனில் வயது, பாலின வித்தியாசமின்றி பொதுமக்களும் ஆயுதமேந்தி வருகின்றனர்.

இதன்படி ,கடந்த 2015ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் பெற்றவர் அனஸ்டாஸியா லென்னா. தற்போது 31 வயதான இவர் ரஷ்யாவை எதிர்த்துப் போராட துப்பாக்கி ஏந்தியுள்ளார்.

அதன்படி ,இவரைப் போலவே உக்ரைன் ஜனாதிபதி அழைப்பை ஏற்று ஏற்கனவே ஒற்றைக் காலை இழந்து அதற்காக செயற்கைக் கால் பொருத்தியுள்ள ஒருவரும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளார்.

மேலும் ,உக்ரைன் நாட்டின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயர் பெற்ற 26 வயதான ஸ்வியாடோஸ்லாவ் யுராஷ் என்பவரும் தனது பங்கிற்கு ஏகே ரக துப்பாக்கியைக் கையில் ஏந்தி போர்க்களம் புகுவதற்கு ஆயத்தமாகி விட்டார்.

Like Us – People News

Facebook – https://www.facebook.com/peoplenewsSL

Youtube  – https://www.youtube.com/watch?v=k-dCKUQGO5

#World #News #Tamilnews #peopleNews #War #MissUkraine “ என கடந்த மாதம் 28 ஆம் திகதி (28.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

எமது குழு மேற்கொண்ட ஆய்வின் போது, இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அனஸ்டாஸியா முதலில் போருக்குத் தயார் என்று குறிப்பிட்டு பதிவேற்றம் செய்திருந்தார். பின்னர் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகியமையினால் தனது பதிவினை மாற்றியமைத்துள்ளார்.

இது தொடர்பாக பல செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

tribuneindia.com Archive

இதுபற்றி விளக்கமும் அளித்துள்ள அவர், ‘’ராணுவத்தில் சேரும் எண்ணம் இல்லை. நான் கையில் வைத்திருப்பது ஏர்சாஃப்ட் கன் வகையைச் சேர்ந்ததாகும். உண்மையான துப்பாக்கி அல்ல. ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உக்ரைன் மக்களை அழைக்கும் வகையில், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன்,’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பல்வேறு ஊடகச் செய்திகளிலும் அப்டேட் செய்துள்ளனர்.

Indian Express Link I Deccan Herald Link

குறித்த தகவல்கள் அனைத்தையும் குறிப்பிட்டு, தினத்தந்தி இணையத்தளம் விளக்கமாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. 


Dailythanthi Link

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உக்ரைனின் முன்னாள் அழகி அனஸ்டாஸியா ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் என பரவும் செய்து போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு


எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஆயுதம் ஏந்தினாரா முன்னாள் உக்ரைன் அழகி அனஸ்டாஸியா ?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published.