
INTRO :
முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், விலங்குகளைக் கொன்று ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது தவறில்லை என பில் கேட்ஸ் டுவிட் பதிவிட்டார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

கானல் நீர் என்ற பேஸ்புக் கணக்கில் ” ‘தினந்தோறும் மில்லியன் கணக்கில் ஆடுகளும் மாடுகளும் கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் வெட்டப்பட்டு ஏழை நடுத்தர மக்களின் பணத்தை பிடுங்கி கோடீஸ்வரர் ஆகின்றனர் முதலாளிகள். ஆனால் முஸ்லிம்கள் ஈதுல் அல்ஹா பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும் மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். இங்கும் முஸ்லிம்களை குறை கூறுவோர் மூளையை அடகு வைத்தவர்களே’
-பில் கேட்ஸ் “ என இம் மாதம் 21 ஆம் திகதி (21.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
ஈதுல் அல்ஹா பெருநாள் தொடர்பாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக விலங்குகளைப் பலியிட்டு ஏழைக்களுக்கு பகிர்ந்தளிப்பது தவறில்லை என பரவிய செய்தியினை நாம் முதலில் அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த பதிவில் உள்ள சில வார்த்தைகளை பயன்படுத்தி டுவிட்டரில் ஆய்வினை மேற்கொண்டபோது, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி (2019.08.10) Wolfie babiee என்ற டுவிட்டர் கணக்கில் இணையத்தில் தற்போது பரவுகின்ற அதே வாக்கியங்கள் அடங்கிய பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது. அவரின் சொந்த கருத்தான இந்த டுவிட்டானது, இதுவரையில் 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்களினால் பகிரப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.
I don’t want to see any tweet hating on Muslims for slaughtering animals, about 1 million animals killed each day by KFC, McDonalds, Burger King etc. too feed the rich & making hella money out of it. During Eid Muslims sacrifice them to feed the poor for Free & y’all lose ur mind
— 𝒲𝑜𝓁𝒻𝒾𝑒 ❦ (@WolfieBabiee) August 10, 2019
மேலும் நாம் குறித்த வாக்கியத்தினை டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு பார்த்த போது அது டுவிட் செய்ய முடியாத பந்தி என கண்டறியப்பட்டது.

இதற்கமைய இது முற்றிலும் போலியாக உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கைகள்
africacheck.org | altnews
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், முஸ்லிம்கள் மாடறுத்தல் தொடர்பாக பில் கேட்ஸ் பதிவிட்ட டுவிட் என பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:முஸ்லிம்கள் மாடறுத்தல் தொடர்பாக பில் கேட்ஸ் டுவிட் பதிவிட்டாரா?
Fact Check By: Nelson ManiResult: False