யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்களா?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO: 

கடந்த சில நாட்களாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு சமூகத்தில் பாரிய பேசு பொருளாகவே மாறியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு காரணம்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து இந்த மாவீரர் தின அனுஷ்டிப்பை அரசாங்க செயற்பாட்டுடன் தொடர்புப்படுத்தி பலரும் தவறான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இதன் பின்னணியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

A screenshot of a social media post

Description automatically generated

 

Facebook Link  | Archived Link 

குறித்த பதிவில் “பட்டம் வழங்கும் இடம் பெரிது என்பதால் பிரச்சினை எதுவும் இல்லை போல்“ என தெரிவிக்கப்பட்டு Tamil Guardian பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்று 2024.11.26 ஆம் திகதி பகிரப்பட்டுள்ளது.

குறித்த பதிவு தொடர்பில் உண்மைத் தன்மை அறியாது இதனை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் நாம் Tamil Guardian பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்த போது, குறித்த பேஸ்புக் பக்கத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளை கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் அனுஷ்டித்தனர் என தெரிவித்து வேறு சில புகைப்படங்களை கடந்த 2024.11.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்துள்ளதை எம்மால் காண முடிந்தது.

A collage of people standing in front of a memorial

Description automatically generated

குறித்த பேஸ்புக் பதிவை பார்வையிட 

மேலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களில் உள்ள பிறந்தநாள் கொண்டாட்ட அலங்காரங்களில் பிரபாகரனின் 64ஆவது பிறந்த தின கொண்டாட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது, உண்மையில் குறித்த படங்கள் இம்முறை கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தால், 70ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதன்படி, குறித்த பதிவில் உள்ள புகைப்படத்தினை நாம் Reverse Image தேடலுக்கு உட்படுத்திய போது, இந்தப் புகைப்படம் 2018ஆம் ஆண்டு பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்  என்பது கண்டறியப்பட்டது.

மேலும் 2018 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பிரபாகரனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டிருந்தால் அது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கும். எனவே நாம் அது தொடர்பில் ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது 2018 இல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பிரகாரனின் பிறந்த நாள் கொண்டாட்ட செய்திகள் வெளியாகியிருந்ததனை எம்மால் காணமுடிந்தது.

அவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்திகள் Link/ Link/ Link

யாழ். பல்கலைக்கழக நிர்வாகம்

மேலும் இது தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டதனை போன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இம்முறை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடவில்லை எனவும், குறித்த பதிவில் உள்ள புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதனையும் அவர்கள் உறுதிசெய்தனர்.

மேலும் இம்முறை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் தீபங்களை ஏற்றி மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

மேலும் இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம் நாம் வினவியபோது, இந்த வருடம் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி எந்தவிதமான கொண்டாட்டகளிலும் மாணவர்கள் ஈடுபடவில்லை எனவும் குறித்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

யாழ். பிராந்திய ஊடகவியலாளர்

இது குறிதது நாம் யாழ். ஊடகவியலாளர்களிடம் தகவல்களை கேட்டறிந்தபோது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இம்முறை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாவில்லை எனவும், யாழ். பல்கலைக்கழகத்தில் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரபாகரனின் பிறந்தநாளை கேக்  வெட்டி கொண்டாடியதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டது. குறித்த கணொளியின் பின்னணியிலேயே 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தவறுதலான புரிதலுடன் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் 2024.11.26 வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனின் பூர்வீக இல்லத்திற்கு முன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான கணொளியை காண்க

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது,  நேற்று (2024.11.26) மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்னால் தாம் கேக் வெட்டியதாகவும், இதன்போது பொலிஸார் அவ்விடத்திற்கு வருகைத் தந்து பிரபாகரனின் புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டாம் என மாத்திரம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றதாகவும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் பிரபாகரனின் புகைப்பட்த்தினை காட்சிப்படுத்தாமல் கேக்  வெட்டி அவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், ஒவ்வொரு வருடமும் தான் இவ்வாறு பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் நாம் யாழ். ஊடகவியலாளர்களிடம் வினவிய போது, அவர்களும் சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிரபாகரின் பிறந்தநாளை நேற்று கொண்டாடினார் என்பதனை எமக்கு உறுதி செய்தனர்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion:முடிவு

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த பதிவில் குறிப்படப்பட்டதனை போன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த வருடம் (2024) பிராபகரனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்படவில்லை எனவும், 2018 ஆம் ஆண்டு யாழ்.பல்ககை்கழக மாணவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பிரபாகரனின் பிறந்தநாள் புகைப்படங்கள் தவறான புரிதலுடன் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுவும் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்களா?

Written By: Fact Crescendo Team  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *