
சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி !! தமிழக அரசு அங்கீகாரம் என பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
24Xttt என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி !! தமிழக அரசு அங்கீகாரம் !! மக்கள் மகிழ்ச்சி !! “ என்று இம் மாதம் 03 ஆம் திகதி (03.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் jaffnacnn என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கிய நாள் முதலாக, ‘என்னிடம் அதற்கு மருந்து உள்ளது,’ என்று கூறி சித்த மருத்துவர் தணிகாசலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக அவர் பலவிதமான வீடியோக்களையும் பகிர்ந்திருந்தார்.
அவரது பேச்சை தமிழக அரசு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த தணிகாசலம், ஒருகட்டத்தில் கொரோனா வைரஸ்க்கான சித்த மருந்தை நானே கண்டுபிடித்தேன் என்றும், அதனை தேவைப்பட்டால் சீனாவுக்கு தரவும் தயார், தமிழகத்திலும் பரிசோதிக்க தயார் என்றும் தெரிவித்தார்.
எனினும், இந்திய- தமிழக அரசு தணிகாசலம் சொன்ன மருந்தை அங்கீகரித்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை.
தமிழக அரசு ஏற்கனவே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடிய சித்த மருந்துகளாக பயன்படுத்தி வருகிறது.
இந்த மருந்துகள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையின் பரிந்துரைகளின்படியே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
மேலும் வதந்திகள் பரப்பியதாக சித்த வைத்தியர் தணிகாசலம் பொலிஸாரால் கடந்த 6 ஆம் திகதி (06.05.2020) கைது செய்யப்பட்டார்.
மேலும் எமது இந்திய தமிழ் பிரிவினர் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை கண்டறிவதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
இதற்கமைய தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்து எதையும் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதி சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி என பேஸ்புக்கில் பகிரப்பட்ட மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்ததா?
Fact Check By: Nelson ManiResult: False