ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க குண்டர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

நாட்டின் அரசியல் இன்று என்ற பேஸ்புக் கணக்கில் ” குரல் வழி சர்ச்சையை தொடர்ந்து குண்டர்களால் தாக்கப்பட்டார் முன்னால் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்,” என்று 09.01.2020 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடலின் போது, குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் என்று வெளியாகியிருந்த புகைப்படங்களை அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் காணக்கிடைத்தது.

Facebook Link | Archived Link

குறித்த பதிவில் ”குரல் வழி சர்ச்சையை தொடர்ந்து குண்டர்களால் தாக்கப்பட்டு ரஞ்சன் மருத்துவமனையில் அனுமதித்த வேளை, கேம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடத்தில்” என்று தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவே இது கேம் என்ற திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சி என்று தெரிவித்துள்ள நிலையில் சிலர் இதை தவறான தலைப்பில் பரப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த மேலும் சில புகைப்படங்களில் அவர் காயம் பட்டுள்ளவாறு அவரை அலங்கரிக்கும் பணி புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Facebook link | Archived Link

மேலும் குறித்த படத்தின் FIRST LOOK Poster உம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், குண்டர்களால் தாக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க என கூறப்பட்ட தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:குண்டர்களால் தாக்கப்பட்டாரா முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க?

Fact Check By: Nelson Mani

Result: False