‘’சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறிய ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ் (Hamza Bendelladj) என்ற ஹேக்கர்,’’ எனும் தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில் ” #Smiling_Hacker

#சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறியவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

அப்படி சிரித்த முகத்தோடு மரணத்தை நோக்கி நடந்துசென்ற ஒருவர்தான்

#Hamza_Bendelladj என்ற ஒரு அதிபுத்திசாலியான #ஹாக்கர் கிரிமினல்!

கம்புயூட்டர் ஸயன்ஸில் பட்டதாரியான 27 வயதுடைய #Bendelladj ஒரு அல்ஜீரியன் நாட்டை சேர்ந்தவராவார்!

இவர் செய்த குற்றம்தான் என்ன என்கிறீர்களா?

217 அமெரிக்கன் #பேங்குகளை ஹேக் செய்து 400 மில்லியன் U.S டாலர்களை கொள்ளையடித்தார் என்பதுதான் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம்!

Bendelladj கொள்ளையடித்த பணம் முழுவதையும் #ஆப்ரிக்கா மற்றும் #பாலஸ்தீனில் வாழும் துன்ப துயரங்களை அனுபவிக்கும் ஏழை எளிய மக்களுக்கான வாழ்வாதார தொண்டு பணிகளுக்காக வேண்டி அவர் பகிர்ந்தளித்துள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது!

போலீசாரால் பிடிக்கப்பட்டபோதும் விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்டு தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுதும் முகத்தில் சிறிதும் பதற்றமோ அச்சமோ இன்றி #சிரித்த முகத்தோடுதான் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளார் #Hamza!

"நான் செய்ததை #குற்றமாக நான் கருதவில்லை!

"நல்லதோர் உலகத்தை உருவாக்க இந்த #பணமும்_அதிகாரமும் பயன்படவில்லையென்றால் பிறகு அவற்றால் என்ன #பயன்?

என்பதுதான் மரணத்தை நோக்கி செல்லும் Hamza வின் இறுதி வார்த்தைகளாக இருந்துள்ளன!

அன்றுமுதல் #ஹம்ஸா பலருடைய மனங்களிலும் ஒரு ஹீரோவாக வீற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது!

நவீன #ரோபின்_ஹூட்டாக மக்கள் இவரை பார்க்கிறார்கள்!” என்று ஜுலை மாதம் 29 ஆம் திகதி (29.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக google reverse Image tool பயன்படுத்தி குறித்த புகைப்படத்தினை ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடுதலின் போது, Aljazeera என்ற இணையத்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி எமக்கு காணக்கிடைத்து.

Aljazeera | archived link

அச்செய்தியை முழுமையாக வாசித்தோம், குறித்த செய்தியில் Hamza Bendelladj பற்றி போலியான தகவல்கள் இணையத்தில் பகிரப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

அதில் இவருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பல போலியான தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த செய்தியில் அல்ஜீரியாவிற்கான அமெரிக்க தூதகராக பணிபுரிந்த Joan Polaschik அவர்களது டுவிட்டர் கணக்கில் கணினி தொடர்பாக செய்யப்பட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதில்லை என தெரிவித்திருந்து இருந்ததாக செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது, அமெரிக்க உளவுப் பிரிவான FBI தாக்கல் செய்து இருந்த குற்றப்பத்திரிக்கை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த பத்திரிக்கையின் படி 30 வருடங்கள் சிறைவாசம் வழங்கப்படும் எனவும் Hamza Bendelladj என்ற நபர் 2009 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையான காலப்பகுதியில் 253 நிதி நிறுவனங்கள் மீது வைரஸ் தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் தகவல்கள் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் அதில் காணக்கிடைத்தது.

fbi US | archived link

இதுவரையில் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது Hamza Bendelladj என்ற நபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அப்போது, குறித்த புகைப்படத்தில் மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட நபர் யார் என்ற கேள்வி எழுந்தது. குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் யார் என்று நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

uk reuters | archived link

ஈரான் நாட்டை சேர்ந்த Majid Kavoosifar என்ற நபர் நீதிபதியை கொலை செய்த குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பொதுமக்கள் மத்தியில் தூக்கில் இடப்பட்டார்.

நாம் Majid Kavoosifar என்ற பெயரினை கூகுள் இணையத்தளத்தில் தேடிய போது, அவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படங்கள் எமக்கு காணக்கிடைத்தது.

உண்மை கண்டறியும் இதுகுறித்து மேற்கொண்ட சில ஆய்வறிக்கைகள் எமக்கு காணக்கிடைத்தது.

hoaxorfactarchived link
smhoaxslayerarchived link
Factcresendo Malayalam Archived link

நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறியவர் ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ் ஹேக்கர் என்று பகிரப்படும் தகவல் மற்றும் புகைப்படங்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அல்ஜீரியாவில் சிரித்தபடி தூக்குமேடை ஏறிய ஹேக்கர் ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ்- உண்மை என்ன?

Fact Check By: Nelosn Mani

Result: False