
INTRO :
இலங்கையில் தாதியர்கள் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Ceylon Muslim என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கையில் தாதியர்கள்..!!
வாழ்த்த வார்த்தைகளே இல்லை உறவுகளே!!!
உயிர் காப்பாளர்கள்
பணம் என்ன “பணம்” உயிர் போனால் வராது.
தங்களின் உயிரையும் துச்சமாக
எண்ணி. தங்கள் குடும்பங்களை
மறந்து நமக்காக இவர்கள் இரவும் பகலும் சேவையாற்றுகின்றார்கள்.
இவர்களை வாழ்த்துவதாக
இருந்தால்
#ஒரு #share #மட்டும் #போதும்” என இம் மாதம் 02 ஆம் திகதி (02.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக
எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்படங்களை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இதில் காணப்படும் புகைப்படங்கள் இலங்கை தாதிகளுடையது அல்ல என கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் மலேசிய நாட்டுடன் தொடர்புடையது என எமது ஆய்விலிருந்து தெரியவந்தது. மலேசிய மொழியில் பகிரப்பட்டிருந்த குறித்த செய்தி இணையத்தினை நாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பார்த்தபோது, “They are Malaysian Heros. Government gives RM500 million to MOH & RM130 million to each state” இதன் தமிழ் மொமியாக்கத்தின் போது, அவர்கள் மலேசிய ஹீரோக்கள். அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கு RM130 மில்லியனும் MOH -க்கும் RM500 வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Link | Archived Link
குறித்த செய்தி இன்னும் சில இணையத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இது குறித்தான ஆய்வின் போது MSN இணையத்தில் வெளியாகியிருந்த செய்தியில் குறித்த புகைப்படத்திற்கான உரிமத்தினை © Provided by Project MM Mark Adam Instagram” என தெரிவித்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த நபரின் இன்ஸ்டெகிராம் கணக்கினை நாம் ஆய்வு செய்த போது, “வைத்தியர்கள், தாதிமார்கள், பொலிஸார், இராணுவ வீரர்கள், துப்புரவாளர்கள் ஆகியோருக்கு நன்றி. உங்களையும் உங்கள் குடும்பத்தினரும் உங்களை கவனித்துக் கொள்ளும்படி நாங்கள் மனதார ஜெபிக்கிறோம்.” என்று மலேசிய மொழியில் பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

Instagram Link | Archived Link
இதன் மூலம் குறித்த புகைப்படம் மலேசிய நாட்டினை சேர்ந்தது என உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
அதில் இருந்த மீதமுள்ள புகைப்படங்களையும் நாம் இவ்வாறு ஆய்வு செய்த போது, அது தாய்வான் நாட்டில் வைத்திய அதிகாரிகளின் புகைப்படங்கள் என எமக்கு கிடைத்த இணைய செய்திகள் மூலம் உறுதி செய்துகொள்ள முடிந்தது.

மேலும் சில இணையத்தளங்களில் இது குறித்தான செய்திகள் வெளியாகியிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
chinatimes.com | news.yahoo.com
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இலங்கை தாதியர்கள் என பகிரப்படும் புகைப்படங்கள் என வெளியான தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கை தாதியர்கள் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: Misleading