
INTRO :
ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் டெல் அவிவ் வீதியில் திரிகிறார் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “”ஜெஃப்ரி எப்ஸ்டீன்” உயிருடன் “டெல் அவிவ்” தெருக்களில் சுற்றித் திரிகிறார்,
மேலும் இஸ்ரேல் 2019 முதல் அவரது மரணத்தை போலியாக சித்தரித்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது “என இம் மாதம் 06 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு (06.02.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இணையத்தில் வைரலாகின்ற குறித்த புகைப்படத்தினை நாம் முதலில் கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது,
எக்ஸ் பக்கத்தில் பதிவாகியிருந்த புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது, அதில் கூகுள் Gemini இன் இலட்சினை பொறிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

ஆகவே இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என சந்தேகம் எழவே நாம் இதனை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் இறந்த போது என்ன நடந்தது என்பது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி பிரிவில் வெளியாகி இருந்த செய்தி அறிக்கையும் எமக்கு காணக்கிடைத்தது.
மேலும் சில சர்வதேச ஊடகங்களும் குறித்த புகைப்படம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வறிக்கையினை வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. AFP Factcheck | Misbar Factcheck
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் டெல் அவிவ் என பகிரப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?
Fact Check By: S G PrabuResult: Altered


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

