
‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

East1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து,இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து,தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று இறுதி யாத்திரை கூறும் இந்தோனிஷிய (Dr Hadio Ali) டாக்டர் ஹாதியோ அலியின் புகைப்படத்தை அவரது கர்ப்பிணியான மனைவி படம் பிடித்துள்ளார்.
ஒரு அந்நிய நபரைப்போன்று தூரத்தில் நின்றே விடைபெறும் டாக்டர் தனது இறுதி சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்கவில்லை.
இந்த புகைப்படம் கூறும் செய்திகள் ஏராளம்.கொரோனா பாதித்த பலருக்கு சிகிச்சையளித்து இந்தினேஷியாவிற்கு மட்டுமின்றி உலகுக்கே ஹீரோவாக திகழும் டாக்டர் ஹாதியோ அலி மார்ச் 22 அன்று தனது மரணத்தை தழுவினார்… ” என்று இம்மாதம் 25 ஆம் திகதி (25.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், முதலில் குறித்த பதிவிலிருந்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.
தேடலின் போது, சில இணையதளங்கள் குறித்த செய்தியினை உண்மை என நம்பி இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.
Jvp News | Archived Link |
Today Jaffna | Archived Link |
மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலில் போது, Ahmad Effendy Zailanudin என்ற மலேசிய நபரொருவர் முதல் முதலாக குறித்த புகைப்படத்தினை அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

குறித்த புகைப்படத்துடன் அவர் மலேசிய மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பதிப்பை பேஸ்புக் மொழிபெயர்ப்பு கருவியின் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்தபோது, கீழ்க்கண்ட விவரம் கிடைத்தது.

மேற்கண்ட பேஸ்புக் பதிவில், ‘’இவர் எனது மைத்துனர். மருத்துவராக உள்ள இவர் மலேசியாவில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் அவரது குழந்தைகளை இப்படித்தான் தொலைவில் இருந்தே பார்ப்பார். இவர் போல ஏராளமானோர் தங்களது உறவுகளை பிரிந்து கொரோனாவைரஸ்க்கு எதிராக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை அல்லா பாதுகாப்பாராக,’’ என எழுதியுள்ளார்.
மேலும் குறித்த நபரின் பேஸ்புக் கணக்கினை பரிசோதனை செய்த போது, குறித்த நபர் மலேசியர் என்பது, அவர் பதிவேற்றம் செய்திருந்த மலாய் மொழி மற்றும் அவரின் வதிவிடம் மலேசியா என குறிப்பிடப்பட்டுள்ளதை கொண்டு உறுதி செய்தோம்.

இதை தவறாக பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
குறித்த செய்தி தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் மேலதிக தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தோனேஷிய டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படம் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Title:இந்தோனேஷிய டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படமா இது?
Fact Check By: Nelson ManiResult: False