கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு?

False சர்வதேசம்

INTRO :
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது.

இந்நிலையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட் 19க்கான வீட்டு வைத்தியங்களை கண்டுபிடித்தார் என ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Ceylon Muslim Talk என்ற பேஸ்புக் பக்கத்தில் ” *மகிழ்ச்சியான செய்தி 😗

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட் 19 க்கான வீட்டு வைத்தியங்களைக் கண்டுபிடித்தார், இது WHO முதலில் ஒப்புதல் அளித்தது. ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு சிறிய இஞ்சி சாறு தொடர்ந்து 5 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், கொரோனாவின் விளைவு 100% வரை அகற்றப்படலாம் என்பதை அவர் நிரூபித்தார். உலகம் முழுவதும் இந்த சிகிச்சையை எடுக்கத் தொடங்குகிறது. இறுதியாக 2020 இல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 

📱எல்லா குழுக்களுக்கும் அனுப்பி விழிப்புணர்வு ஏற்பட உதவுங்கள் …”  என  இம் மாதம் 02 ஆம் திகதி  (02.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

கொரோனா வைரஸிற்கு பலர் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. அதே போன்று சிலர் வீட்டு வைத்தியம் எனக் கூறி பல வைத்திய குறிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து WHO ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறது. மிளகு, தேன் உள்ளிட்டவை கொரோனா வைரஸ்க்கு நிரந்தர தீர்வாகாது என அறிவித்துள்ளது.

WHO Advice for Public | Archived Link 

மேலும், எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, thelogicalindian என்ற இணையதளம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்புகொண்டு வினவியபோது இப்படி எந்த மாணவரும், தங்கள் தரப்பில் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

thelogicalindian Link | Archived Link

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு, என்று பகிரப்படும் செய்தி போலியானது என உறுதியாகி உள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *