50000 தமிழர்களுக்கு கனடாவில் வேலை வாய்ப்பா?

False சர்வதேசம்

INTRO :
கனடாவில் 50,000 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Jaffna News  என்ற பேஸ்புக் பக்கத்தில் ”தமிழர்களின் வரவேர்ப்பை பண்டு வியந்த கனடா பிரதமர் திரு.ஜஸ்டின் அவர்கள் மெய்சிலித்து போய், அதே Facebook மூலம் தமிழர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கனடாவில் வேலை வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளார்!! இந்த பதிவை ஷேர் செய்யும் முதல் 50,000 தமிழர்களுக்கு கனடா செல்ல விசாவும் அங்கு வேலையும் ஏற்பாடு செய்கிறார் இந்த பதிவில் உள்ள #TNWelcomesPM என்ற hashtag ஐ வைத்து facebook நிறுவனம் யார் முதலில் பகிர்ந்த 50,000 நபர்கள் என்ற விவரத்தை அவருக்கு அனுப்பி வைக்கும் பின்னர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் ஆதார் அடையாள அட்டையும் பின்னர் உங்கள் கல்வித்தகுதிகள் சேகரித்து அதற்கேற்ப வேலை வழங்க உள்ளனர்!! கனடா செல்ல உள்ள தமிழர்கள் விரைந்து #share செய்யவும்!!.”  என 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி  (03.03.2018) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வு மேற்கொண்டோம்.

இதுகுறித்து நாம் இலங்கையில் அமைந்துள்ள கனடா தூதரகத்தினை தொடர்பு கொண்டு வினவியபோது, இதில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை என தெரிவித்தார்.

கனடாவிற்கு இலவசமாக விசா வழங்குவதாக பல்வேறு போலி தகவல்கள் அடிக்கடி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை பற்றி எமது குழு ஏற்கனவே உண்மைத் தன்மை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோன்றே இந்த விடயமும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

கனடா செல்ல இலவச விசா தொடர்பாக பரவிய போலி தகவலுக்கு எமது  பிரிவினர் ஏற்கனவே மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:50000 தமிழர்களுக்கு கனடாவில் வேலை வாய்ப்பா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published.