INTRO :

உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ஸ்வீடன் என்ன கருமம்டா இதெல்லாம்...*

உடலுறவு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிக்கு அங்கீகாரம் அளித்துள்ள நாடு!*

முதல் முறையாக ஸ்வீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டு என்று அங்கீகாரம் அளித்து "செக்ஸ் சாம்பியன்ஷிப்" போட்டி ஜூன் 08ஆம் திகதி முதல் நடத்த தீர்மானித்துள்ளது.*

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விஷயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது ஸ்வீடன்.*

அதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிட்டுள்ள ஸ்வீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.*

இந்தப் போட்டி வருகிற 08ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளது.*

*பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது.*

*மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது.*

இந்தப் போட்டியை நடத்த ஸ்வீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது.*

70 சதவிகிதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள்.*

30 சதவிகிதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள்.*

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.*

ஸ்வீடனின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.*

பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.*

*- ALAGAR MEDIA -* “ என இம் மாதம் 06 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (06.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,

ஸ்வீடன் அரசாங்காம் உடலுறவை ஒரு விளையாட்டு போட்டியாக அறிவித்தமைக்கான எவ்விதமான செய்தியும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

எமது தேடுதலின் போது, ஸ்வீடன் நாட்டு ஊடகமான Goterborgs-Posten கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி (26.04.2023) வெளியான செய்தியில் ஊடலுறவு போட்டி அவர்களின் தேசிய விளையாட்டு அமைப்பின் ஒரு அங்கமில்லை.

gp.se | Archived Link

மேலும் நாம் ஸ்வீடன் நாட்டு விளையாட்டு அமைப்பின் ஊடக பேச்சாளரான Anna Setzman, பாலியல் கூட்டமைப்பு ஸ்வீடன் விளையாட்டு அமைப்பில் உறுப்புரிமைப்பெற்றதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என உறுதி செய்ததாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் நாம், ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷனுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டோம். அதற்கு பதில் அளித்த அந்த அமைப்பு, “செக்சை விளையாட்டாக அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு சில நிதி தொடர்பான பிரச்னை இருக்கலாம். விளையாட்டு கூட்டமைப்பானது பயிற்சி அளிக்க, நடுவராக செயல்பட, நடுவராக செயல்பட பயிற்சி அளிக்க என்று பணம் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற சில அடிப்படையை எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு இ-ஸ்போர்ட்ஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உட்கார்ந்த இடத்தில் இருந்து கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து வீடியோகேம் விளையாடுவதைக் காட்டிலும் ஆயுளை நீட்டிக்கும் உடல் உழைப்பைக் கொண்ட செக்ஸ் மோசமானதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அது விளையாட்டா இல்லையா என்பது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், செக்ஸ் சாம்பியன்ஷிப் ஜூன் 8ம் திகதி நடைபெறும். ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷன் மட்டுமே பாலியல் தொடர்பான பயிற்சிகள் அளிக்க அரசாங்க அனுமதியைக் கொண்ட உலகின் ஒரே அமைப்பு” என்று தெரிவித்திருந்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, உடலுறவை ஒரு விளையாட்டாக ஸ்வீடன் அங்கீகரித்தது என பரவும் தகவல் போலியானது என்பது உறுதியாகின்றது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன்?

Written By: S.G.Prabu

Result: False