கருப்பர் ஏசுவா இது; பேஸ்புக்கில் வைரலாகும் புகைப்படம் உண்மை என்ன ?

சர்வதேசம்


இது தாண்டா கருப்பர் ஏசு.. எல்லாம் கிடா வெட்டி சாமி கும்பிட்டு போங்க என்ற ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Fun Memes  என்ற பேஸ்புக் பக்கத்தில்   ” என்னடா ஏசு கைல அருவால கொடுத்து இருக்கிங்க 🙄🙄” என்று  கடந்த மாதம் 28 ஆம் திகதி (28.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக தேடுதலில் ஈடுப்பட்ட போது இவர்கள் குறிப்பிடுவது போல இது இயேசுவின் சிலை அல்ல. இது ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் உள்ள சிலையாகும். 

சந்தியாகப்பர் அப்பகுதி கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் காவல் தெய்வமாகும். அங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அன்னை மரியாளின் தீவிர பக்தராக அறியப்படுவதால், அங்குள்ள தேவாலயத்தில் மரியாள் மற்றும் யாகப்பருக்கு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாகும்.

கடந்த வருடம் நடந்த திருவிழா தொடர்பாக இணையத்தில் வெளியான சில செய்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Maalaimalar News link | Archived link 

மேலும் சில இணையத்தளங்களில் வெளியான செய்திகள் ,

Vikatan News Archived link
dinamaniArchived link

புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் பெயரில் இயங்கிவருகின்ற பேஸ்புக் பக்கத்தில் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 476ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் உறை வெளியிட்டுள்ளது.

மேலும், புனித யாக்கோபு என்பவர் நற்செய்தியாளரான புனித யோவானின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவரின் வரலாற்றினை பற்றி அறிந்திட கீழுள்ள வீடியோவினை பார்வையிடவும்

 எமது இந்திய தமிழ் பிரிவும் இது குறித்த மேற்கொண்ட ஆய்வினை கண்டறிவதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதற்கமைய கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படத்தில் இருப்பது இயேசு கிறிஸ்து அல்ல. அவர் புனித சந்தியாகப்பர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவுஎமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கருப்பர் ஏசுவா இது; பேஸ்புக்கில் வைரலாகும் புகைப்படம் உண்மை என்ன ?

Fact Check By: Nelson Mani 

Result: False