
INTRO :
இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மீன்வர்களின் வலையில் சிக்கிய மீன்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டுவருகின்றமை எமக்கு காணக்கிடைத்து.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படம் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Kado Kappu என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இன்று #மட்டக்களப்பு #கல்லடி கடற்கரையில் கரைவலை மூலம் பிடிபட்ட அதிகளவான #சூரை #மீன்கள். இவ் வருடத்தில் இன்றைய தினமே அதிக மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டது.” என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த புகைப்படம் 2012 ஆம் ஆண்டில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

science navigators | archived link
நாம் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது, Battinews என்ற மட்டக்களப்பு பிரதேசத்தினை மையமாக கொண்டு இயங்கும் ஓர் செய்தி இணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் மட்டக்களப்பில் பாரியளவு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதா என்று தேடலில் ஈடுப்பட்டபோது, கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு மீனவருக்கு சுமார் 20,000 கிலோவிற்கு அதிகமான மீன்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த புகைப்படத்திற்கும் இணையத்தில் குறித்த செய்தியினை பகிர்ந்து பகிரப்பட்டுள்ள புகைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.