கொரோனா வைரஸ் தான் உலகை சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியின் நிலைமை வீதிகளில் சிகிச்சைகள் என்று சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Fareed Althaf என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ya_Allah

Situation in Italy 😢 Treatments in Streets

இத்தாலியில் நிலைமை 😢 வீதிகளில் சிகிச்சைகள்” என்று கடந்த மாதம் 24 ஆம் திகதி (24.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படங்களை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

குறித்த ஆய்வின் போது ஜாக்ரெப் என்ற நாட்டின் தலைநகரான குரோஷியாவில் கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.03.2020) நடந்த பூமி அதிர்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்து தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் தொடர்புபடுத்தி இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

பூமியதிர்ச்சியினால் குரோஷியாவில் உள்ள வைத்தியசாலைகளும் சேதமடைந்தமையால் மக்கள் வீதியில் வைத்து காயமடைந்தவர்களுக்கு வைத்தியம் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த செய்தி தொடர்பாக, ஏற்கனவே இணைய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் விவரம் கீழே,

abc news | Archived Link

aljazeera | Archived Link

மேலும் குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் குரோஷியாவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியுடன் தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள்.

டுவிட்டர் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சிலர் தமது டுவிட்டர் கணக்கில் குறித்த புகைப்படங்களை குரோஷியாவில் எடுக்கப்பட்டதாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

https://twitter.com/angjelinaahmeti/status/1241704716792406018

உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை கவனித்த மக்களுக்கு குரோஷியாவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி தொடர்பான செய்திகள் கிடைக்கப் பெறவில்லை என்பது எமது ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

இதை பயன்படுத்தி தவறான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்துள்ளமை உறுதி செய்யப்படுகின்றது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு +94771514696 தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மேற்கண்ட புகைப்படங்கள் தவறானவை என்று சந்தேகமின்றி உறுதியாகிறது.

Avatar

Title:இத்தாலி நிலைமை, வீதிகளில் சிகிச்சை; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: False