
INTRO :
பிரேசிலில் அமைந்துள்ள உலகின் அகலமான சாலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

IBC Tamil என்ற பேஸ்புக் கணக்கில் “ உலகின் அகலமான சாலை ….😱
#IBCFacts #Brazil #Factcheck “ என இம் மாதம் 01 ஆம் திகதி (28.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது சீனாவில் அமைந்துள்ள நெடுஞ்சாலை என தெரியவந்தது.
குறித்த புகைப்படமானது, 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. dailymail | indiatoday
சீனாவில் உள்ள G4 beijing- hong kong- macau expressway சாலை சில குறிப்பிட்ட தொலைவுக்கு, 25 வழி சாலையாக விரிவடைந்து பின்னர் 4 வழியாக சுருங்குகிறது என்றும் தெரியவந்தது.
இதுபற்றிய புகைப்படங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

கூகுளில் நாம் world largest Width road என்று தேடிய போது, Guinness world record இல் பிரேசில் நாட்டில் அமைந்துள்ள MONUMENTAL AXIS என்ற வீதி எமக்கு கிடைக்கப்பெற்றது.
இது 250 மீற்றர் அகலமானதும் என்றும் இது சுமார் 2.4 கிலோமீற்றர் நீளமான வீதி எனவும் அறியக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில் பிரேசிலில் அமைந்துள்ள உலகின் அகலமான சாலை என பகிரப்பட்ட புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
FactCheck: சீனாவில் 50 வழி சாலையா? முழு விவரம் இதோ!
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.