இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம்; உண்மை தெரியுமா?

Misleading இலங்கை

INTRO :
இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம் வந்துள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம்… “ என இம்மாதம் 16 ஆம் திகதி (16.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் வீடியோவில் பகிரப்பட்டிருந்த காரில் இருந்த வாகன இலக்கத்தகட்டினை பார்வையிட்ட போது, அது 301-9947 என்ற காணப்பட்டது. இது இலங்கையில் பதியப்பட்டுள்ள இலக்கம் என பார்க்கும் போது தெரிகின்றது. மேலும், இது பழைமையான கார் இலக்கம் பதியும் முறையில் பதியப்பட்டுள்ளதை போன்று எமக்கு தெரிந்தது.

உடனடியாக நாம் இலங்கை போக்குவரத்துத் திணைக்களத்தின் இணையத்தள பக்கத்தின் ஊடாக ஆய்வு செய்த போது, இது NISSAN BLUE BIRD வர்க்கத்தினை சேர்ந்த 1996 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட வாகனம் என்றும், இது LOLC FINANCE PLC நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமானது அல்லது அடகு வைக்கப்பட்ட வாகனம் என தெரியவந்தது.

குறித்த வீடியோவில் இந்த வாகனத்தில் இலக்கத்தகடு சீன மொழியில் உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆகவே நாம் கூகுள் லென்ஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இது ஜப்பான் மொழி என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் Nissan நிறுவனமானது ஜப்பான் நாட்டு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் இதுபோன்று வேறு வாகனங்கள் இலங்கையில் காணப்படுகின்றதா என ஆய்வு செய்தபோது, அதே வகையினை சேர்ந்த அதே வருடத்தின் தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்று விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Riyapola | Archived

குறித்த வகையில் இலக்கத்தகடினை நாட்டில் பயன்படுத்த முடியுமா என தெரிந்துக்கொள்ள இலங்கை போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அழககோனிடம் வினவினோம்.

மேற்படி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகடு சட்டப்பூர்வமானது அல்ல என அவர் எமக்கு உறுதி செய்தார். 2000 ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படுகின்றன,

மேலும் திணைக்களம் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளை போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்குவதில்லை, ஆனால் இலக்கத் தகடுகள் தொடர்பான மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க இருத்தல் வேண்டும். இல்லையெனில் குறித்த வாகன இலக்கத்தகடு சட்டப்பூர்வமற்றது என்று எமக்கு அறியத்தந்தார்.

மேலும், சில சிறப்பு சந்தர்ப்பங்களில், வெளிநாட்டு பிரஜைகள் நாட்டில் அவர்களின் கார்களை ஒரு வருடத்திற்கும் குறைவாக ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இதுபோன்ற அரிதான சந்தர்ப்பங்களில் கூட, இலங்கை மோட்டார் வாகனங்களுக்கு ஏற்ப மோட்டார் வாகனங்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட இலக்கத் தகடு வழங்கப்படுகிறது. ஆகவே இது போன்ற வேறுநாட்டு குறியீடுகள் குறித்த இலக்கத்தகடுகளில் காணப்படாது என அவர் எமக்கு தெரியப்படுத்தினார்.

மேற்படி வீடியோ தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவினோம். எவ்வாறாயினும், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த இலக்கத் தகட்டை சட்டப்பூர்வ இலக்கத் தகடாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும் இது தொட்ரபாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு அவர் அறிவித்துள்ளதாகம் எமக்கு தெரிவித்தார்.

நாட்டில் நிலவுகின்ற அரசியல் மோதல்களுக்கு அமைய, ஐப்பான் மொழியில் பதியப்பட்டிருந்த இலக்கத்தகடினை சீன வாகன இலக்கத்தகடு பாவனையிற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளதாக தவறான கருத்தினை வெளிகாட்டும் விதமாக குறித்த வீடியோ அமைந்துள்ளமை எமது ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம் என பகிரப்படும் வீடியோவில் இருப்பது ஐப்பான் நாட்டு மொழியில் பதியப்பட்ட இலக்கத்தகடு என்பதோடும், குறித்த இலக்கத்தகடு இலங்கையில் பயன்படுத்த தடை என்பது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம்; உண்மை தெரியுமா?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published.