
INTRO :
யாழ்.பூநகரியில் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவினை மேற்கொண்டு வந்தநிலையில் மக்களுக்கு கையும் களவுமாக சிக்கிய நிலையில் நிர்வாணமாக ஓட்டம் பிடித்துள்ளதாகவும், குறித்த பெண் மக்களிடம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு ஓர் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

கிழக்கு ஓசை என்ற பேஸ்புக் கணக்கில் ” யாழ் பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர் தான் பணி செய்யும் காரியாலையத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலைசெய்யும் சக பெண் உத்தியோகத்தரை அழைத்து வந்து தான் பணியாற்றும் காரியாலையத்தை பூட்டி விட்டு உடலுறவில் ஈடு படுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்
கிராம சேவகர் அடிக்கடி பணி நேரம் முடிந்த பின் பெண் உத்தியோகஸ்தர் ஒருவரை அழைத்து வந்து கிராம சேவகர் காரியாலயத்தை பூட்டிவிட்டு இருப்பதை அவதானித்த மக்கள் இன்று கிராம சேவகர் பெண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் போது
இருவரும் உடலுறவில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது கைய்யும் மேய்யுமாக பிடிபட்டனர் இதில் கிராம சேவகர் பெண் உத்தியோகத்தரை விட்டு தப்பி ஓடிவிட்டார் பெண் உத்தியோகத்தர் நிர்வாணமான நிலையில் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வங்கியுள்ள சமபவம் இன்று பூநகரி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது” என இம் மாதம் 11 ஆம் திகதி (11.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
அத்தேடலின் போது, 2020 மார்ச் மாதம் 18 ஆம் திகதி இது குறித்து பல இணைய தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அதற்கமைய இணையத்தில் வைரலான குறித்த காணொளி தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது கொழும்பு தொட்டலங்க பகுதியில் இடம்பெற்ற சம்பவம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

siyathanews.lk | Archived link
மேலும் இது குறித்து நாம் பூநகரி நகரத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலையங்களுக்கு நாம் தொடர்புக்கொண்டு வினவிய போது, அவர்களுக்கு இது குறித்தான எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தனர்.
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு நிமிர்த்தமாக பொலிஸ் நிலையத்தில் அடிக்கடி முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், சில வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக பிரேதச காரியலத்திலும் தொடர்புக்கொண்டு வினவியதாகவும் அதுபோன்ற எவ்விதமான சம்பவம் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட தேடலில் பூநகரியில் கிராம சேவகரின் தவறான நடத்தை என கூறப்படும் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பகிரப்பட்ட புகைப்படம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:யாழ் பூநகரி கிராம சேவகர் தகாத உறவு; பரவும் புகைப்படம் உண்மையா ?
Fact Check By: Nelson ManiResult: Misleading