
இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள் என இணைய செய்தியொன்று பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News Link | News Archived Link
JVP News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள்” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு JVP News என்ற இணையத்தின் செய்தி லிக்கினையும் இணைத்திருந்தனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்பட தொகுப்பிலிருந்து ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடலிற்கு உட்படுத்தினோம்.
குறித்த தேடலின் போது 2018 ஆம் ஆண்டு மதுரையை அடுத்த உத்தங்குடி கால்வாய் அருகே உள்ளது மருதங்குளம் என்ற கிராமத்தில் கிட்டத்தட்ட 80 இங்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்து காணப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படம் என கண்டறியப்பட்டது.

மேலும் குறித்த செய்தி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த மற்றைய இரு புகைப்படங்களும் இலங்கை சேர்ந்தது என்று எமது ஆய்வில் கண்டுபிடிப்பட்டது.
குறித்த இரு புகைப்படங்களும் 2018 நவம்பரில் பிரபாத் நதீரா ராஜபக்ஷ (Prabath Nadeera Rajapaksha) என்பவரினால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பேஸ்புக் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தொகுப்போடு அவர் இட்டுள்ள பதிப்பில் ”சில விவசாயிகள் தமது நெல் வயலினை நாசம் செய்யும் மயில்களை தடுப்பதற்காக நெல்லை விதைக்கும் போது அதனுடன் ஆபத்தான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.”



முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் மயில்கள் கொல்லப்படுகின்றது என பகிரப்படும் புகைப்படங்களில் ஒரு புகைப்படம் இந்தியாவில் மதுரை மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையது. மற்றைய இரு புகைப்படங்களும் இலங்கையில் எடுக்கப்பட்டிருந்தாலும் குறித்த புகைப்படங்கள் அனைத்து 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை; தற்போது அல்ல என்பது எமது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.