டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

Partly False சர்வதேசம்

INTRO :
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Quiz Centre என்ற பேஸ்புக் கணக்கில் “ தொடரில் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனையுடன் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் சாதுர்யமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். “ என இம் மாதம் 25 ஆம் திகதி (25.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தங்கப்பதக்க பட்டியல் தொடர்பாக ஆய்வினை நாம் மேற்கொண்ட போது, இதுவரையில் (28.07.2021) இந்தியா ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டுமே பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

olympics.com

இந்த சூழலில்தான், ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி பிரிவில், பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றதாகக் கூறி தகவல் பகிரப்படுகிறது. ஆனால், அவர் வென்றது World Cadet Wrestling Championship 2021 போட்டியில் ஆகும். 

இது குறித்து இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் சிலர், இதனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புபடுத்தி தகவல் பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்ற தகவல் தவறானது என உறுதியாகியுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

Fact Check By: Nelson Mani 

Result: Partly False

Leave a Reply

Your email address will not be published.