
INTRO :
குவைட் பிரான்ஸ் நாட்டு தயாரிப்புக்களை குப்பையில் வீசினார்கள் தெரிவிக்கப்பட்டு ஓர் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Srilankans in Kuwait/ குவைத் வாழ் இலங்கையர்கள் என்ற பேஸ்புக் கணக்கில் ” குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் குப்பைகளில் கொட்டுகிறது” என இம் மாதம் 03 ஆம் திகதி (03.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற வீடியோவில் இருந்து எடுத்த screenshot புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
அத்தேடலின் போது, 2020 மே மாதம் 14 ஆம் திகதி இது குறித்து பல சவுதி அரேபிய நாட்டு இணைய தளங்கள் செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அதற்கமைய இணையத்தில் வைரலான குறித்த காணொளி தொடர்பாக வெளியிட்டிருந்த செய்தி ” சவூதி அரேபியாவின் அல் ஹசா ஒயாசிஸில் முறையான களஞ்சியப்படுத்தல் இல்லாதமையினால் பழுதான சீஸ் போத்தல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மேலும் குறித்த செய்தி அந்நாட்களில் புற்றுநோயினை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாக டுவிட் செய்யப்பட்டிருந்ததாகவும் அதற்கு அந்நாட்டு அமைச்சகம் பதிவிட்டவருக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் எதுவும் இல்லை என்பதை வர்த்தக அமைச்சு உறுதி செய்துள்ளது.
நாம் மேற்கொண்ட தேடலில் பழைய வீடியோவினை எடுத்து தற்போது பிரான்ஸில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றிய கேலிச் சித்திரத்தைக் காட்டிய ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து பிரான்ஸிற்கு எதிராக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதனுடன் இந்த வீடியோவையும் தொடர்பு படுத்தி போலியான தகவலினை பரப்பி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பைகளில் போடுகிறதா குவைட்?
Fact Check By: Nelson ManiResult: Misleading