இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என தடை செய்து முத்திரை குத்தியுள்ள கத்தார் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

East1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என தடை செய்து முத்திரை குத்தியுள்ளது கத்தார் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” என்று இம் மாதம் 07 ஆம் திகதி (07.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் முதலில் குறித்த புகைப்படத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகத்தை ஆய்வு செய்தோம். அதில் “Sunset Yellow (E110) and Carmosine (E122) : May have an adverse effect on activity and attention in children” (குழந்தைகளின் செயல்பாடு மற்றும் கவனத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்) என பதியப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

அதற்கடைய நாம் முதலில் E இலக்கம் தொடர்பாக எமது ஆய்வினை தொடங்கினோம்.

1960 களில், ஐரோப்பிய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சேர்ந்து இயற்கை மூலங்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட சேர்க்கைகளின் பட்டியலை அறிமுகப்படுத்தின அல்லது சேர்க்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உணவுகளில் சில தீங்கு விளைவிக்கும் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கும் ஒரு அட்டவணை உருவாக்கப்பட்டது.

ஐரோப்பாவில், குறித்த அட்டவனை E எண்களுடன் குறியாக்கம் செய்யப்படுகின்றன, அதே நேரத்தில் அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் INS குறியீடு எண் அல்லது முழு பெயர் லேபிள்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கைகள் மற்றும் சுவைகள் என அழைக்கப்படும் 1000 க்கும் மேற்பட்ட E அல்லது INS குறியீடுகள் உள்ளன.

உதாரணமாக விட்டமீன் சி ஐரோப்பியாவில் E300 என அழைக்கப்படுகிறது. சில நாடுகளில் அது INS 300, உணவின் அமிலம் 300, "அஸ்கார்பிக் அமிலம் (300)" அல்லது "வைட்டமின் சி (300)" 300 குறியீடு எண் கொண்ட லேபள்களில் காணலாம்.

இலங்கையில் உணவில் சேர்க்கப்படும் சேர்க்கைகள் மற்றும் சுவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக சுகாதார அமைச்சகத்துடன் இணைந்த உணவு நிர்வாக பிரிவு (Food Control Administration Unit) அமைந்துள்ளது.

நாடு முழுவதும் கிடைக்கின்ற அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் (உதாரணம் :- பிஸ்கட், குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட பால், உலர்ந்த பால் மா ) சேர்க்கப்படும் சேர்க்கைகளுக்கான குறியீட்டு எண் குறித்த பைக்கற்றுக்களில் பொறிக்கப்படுதல் கட்டாயமாகும்.

1980 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம் இந்த முறையில் பதப்படுத்தப்பட்ட உணவை ஒழுங்குபடுத்துகிறது.

குறித்த அறிவிப்பு 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு எண் 1472/19 உடன் வெளியிடப்பட்ட திருத்தங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இலங்கையில் இது INS குறியீடு எண்ணாக பயன்படுத்தப்படுகிறது. வர்த்தமானி அறிவிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Link

நாம் உணவு கட்டுப்பாட்டு நிர்வாக பிரிவின் அதிகாரியை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு இது குறித்து வினவியபோது, இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சில நிறமிகள் மட்மே பயன்படுத்தப்பட்ட முடியும் எனவும் குறித்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் E122 மற்றும் E110 உள்ளன என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தகவல் அறிந்துக்கொள்ள நாம் மஞ்சி சாக்லேட் பப்ஸ் எற்பத்தியாளரான சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு சந்தைப்படுத்தல் உத்தியோகஸ்தரை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை இலங்கையிலும் வளர்ந்த நாடுகளிலும் விற்பனைக்கு தயாரிக்கும் போது, ​​உணவில் உள்ள பொருட்கள் மற்றும் சேர்க்கைகளை தொகுப்பில் குறிப்பிடுவது கட்டாயமாகும் என்றும் கத்தார் மாநில உணவு கட்டுப்பாட்டு ஆணையமும் இந்த சட்டத்தை செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அதற்கமையவே கட்டார் நாட்டிற்கு அனுப்பப்படும் பிஸ்கட் பைக்கற்றுக்களில் தெளிவாக காட்டுவதற்கு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் பதப்படுத்தப்பட்ட ஒவ்வொரு உணவிற்கும் அதன் சொந்த குறியீடு எண் இருப்பதாகவும், அவை பெரும்பாலும் காண்பிக்கப்படுவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மஞ்சி பிஸ்கட்டில் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்குக் அமைவாகவே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும், இலங்கையிலோ அல்லது தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் வேறு எந்த நாட்டிலோ இந்த பிஸ்கட்டுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் உயர் செயல்திறன் பாதிப்பு குறித்து எந்த அறிக்கையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் கட்டார் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுக்கப்பட்ட ஆரஞ்சு பானத்தின் லேபிளையும் அவர்கள் எங்களுக்கு வழங்கினர். அதில் அதே E 110 குறியீடு எண்ணையும் கொண்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது. * This material may be having a negative effect on activity and concentration in children என பொறிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மஞ்சி பிஸ்கட் மற்றுமல்ல அதே போன்ற மற்றைய உற்பத்திகளும் இந்த குறியீட்டினை கொண்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

மேலும் கட்டார் நாட்டின் உணவு மற்றும் விவசாய இறக்குமதி விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் ஆவணத்தில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கைகளில் E110 மற்றும் E122 நிறமிகளும் இருப்பதைக் காணலாம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறமிகளைப் பற்றியும், குழந்தைகளின் அதிவேகத்தன்மை குறித்தும் பிரிட்டிஷ் சுகாதார தொடர்பாக செய்திகள் வெளியாகும் இணையத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில், மேற்கூறிய இரண்டு நிறமிகளும் குழந்தைகளுக்கு கவனக் குறைபாடுகள் மற்றும் அதிவேகத்தன்மையுடன் தொடர்புடைய கோளாறுகள் (Attention deficit hyperactivity disorder (ADHD))

உள்ள குழந்தைகள் மேற்கூறிய இரண்டு நிறமிகள் உட்பட 6 நிறமிகளைகக் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும், உணவு நிறமிகள் மற்றும் அதிவேகத்தன்மைக்கு இடையேயான தொடர்பு இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை என்பதோடு இது குறித்து கண்டறிய கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

Link | Link 2

மின் எண்கள் மற்றும் சேர்க்கைகள் குறித்த மேலும் சில குறிப்புகள் இங்கே Link 1 | Link 2

மேலும் நிறமிகளின் பயன்பாடு என **May have an adverse effect on activity and attention in children (குழந்தைகளின் செயல்பாடு மற்றும் கவனத்தை பாதிக்கும்) என உலகின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கட் உட்பட பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இதை காணலாம்.

எமது சிங்கள பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட தேடுதலில் அடிப்படையில் மஞ்சி சாக்லேட் பிஸ்கட் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் மக்கள் மத்தியில் தவறான கருத்தினை கொண்டு சேர்த்துள்ள என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நிறமிகளின் குறியீடுகள் உற்பத்தியின் போது பொறிக்கப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளமையால் அது குறித்த பொதிகளில் பொறிக்கப்படுவது வழமையான செயற்பாடாகும்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மஞ்சி சாக்லேட் பிஸ்கட் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

Fact Check By: Nelson Mani

Result: Misleading