
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்

Hari Haran என்ற பேஸ்புக் கணக்கில் ” நியமனம் பெற்றுள்ள தமிழர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு எமதினிய வாழ்த்துக்கள்.” என்று கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட வேளையில் இலங்கையில் நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியின் பின்னர் இலங்கையில் அனைத்து மாகாணத்தின் ஆளுநர்கள் புதியதாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் வடமாகாணத்திற்கான ஆளுநர் இரண்டு மாதங்கள் கடந்த பின்னரே நியமிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.12.2019) ஜனாதிபதி செயலகத்தில் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் 02.01.2020 பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வடமாகாண ஆளுநராக முரளி நியமனம் என கூறப்பட்ட தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.