இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார், அவதானத்துடன் செயற்படுங்கள் என்று பரவும் தகவல் தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Suresh Rajendran என்ற பேஸ்புக் கணக்கில் ” சாரதிகளே முடிந்தால் இதனை பகிர்ந்து உதவுங்கள்

ஓட்டுணர்(ட்ரைவர்மார்)களே..!

இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது

இலங்கை வீதியெங்கும் டிஜிடல் தொழிநுட்ப கேமராக்களுடன் பொலீஸார்

அவதானத்துடன் செயற்படுங்கள்...” என்று கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

இதன் போது குறித்த புகைப்படமானது, 2018 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் முதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதிவேக வீதியில் பொலிஸார் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி அளவில் பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

neth news | Archived link

மேலும் நாம் மேற்கொண்ட சோதனையின் போது, 2018 ஆம் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இலங்கையின் உத்தியோகப்பூர்வ செய்தி இணையத்தளமான news.lk என்ற இணையத்தளத்தில் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் புதிய வேக கட்டுப்பாட்டு தொழில்நுட்ப கருவிகள் அதிகவேக வீதியில் பொருத்தப்படவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

News.lk | Archived Link

மேலும் இதுகுறித்தான செய்தி வெளியான இணையத்தளங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

newsfirstArchived Link
dailymirrorArchived Link
adaderanaArchived Link

2018 ஆம் ஆண்டே குறித்த டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களை பொலிஸார் பயன்படுத்தி வருகின்றமை எமக்கு உறுதியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார் என பேஸ்புக்கில் பழைய புகைப்படத்தை புதியது போல் பதிவேற்றம் செய்து பரப்பி வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸாரா?

Fact Check By: Nelson Mani

Result: Misleading