
சுடர் ஒளி பத்திரிகையின் பெயரில் சஜித் பிரேமதாச,மனோ கணேசன் மற்றும் ரிஷ்வி முப்தி ஆகியவர்கள் தெரிவித்தாக பல செய்திகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Ilyas Sana என்ற பேஸ்புக் கணக்கில் ” ரிஷ்வி முப்தி கோட்டாவின் கைக்கூலி
முஸ்லிம்களே அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவருடைய விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அவர் ஒரு முனாபிக் – முன்னாள் பா.உ முஜிபுர் ரஹ்மான்
என்று இம் மாதம் 11ஆம் திகதி (11.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Careem Naleem என்ற பேஸ்புக் கணக்கில் தமிழர்களுக்காக சுமந்திரன் வாய் திறந்தது கிடையாது – மனோ
தமிழனாக இரு முதலில் பிறகு சோனிக்காக வாதாடலாம்
இம்முறை தமிழ் கூட்டமைப்பை தமிழர்கள் தூக்கி எறிவார்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் உறுப்பினர்களும் இதுவரை தமிழர்களின் எந்த வித பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறவில்லை இதற்கிடையில் சோனிக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போகிறாராம் சுமந்திரன் இம்முறை தமிழிர்கள் தமிழ் கூட்டமைப்பிற்கு பாடம் புகட்டுவார்கள் செத்தவர்களை எரிப்பது தமிழர் மரபு முதலில் தமிழனாக மாறுங்கள் பிறகு வாதாடலாம்.
என்று இம் மாதம் 13ஆம் திகதி (13.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fathima Safeeka என்ற பேஸ்புக் கணக்கில்
முஸ்லிம்கள் பௌத்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு எரிப்பதற்கு ஒத்துழையுங்கள்
கொரோனா வைரஸை பரப்பியவர்கள் முஸ்லிம்களே – சஜித் பிரேமதாசா
செத்தவர்களை எரிப்பது பௌத்த சட்டத்திற்கு அமைவானதே இது ஒரு சிறந்த முன்மாதிரி இதை எதிர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். கொரோனாவில் இறப்பவர்களை எரிப்பதே சரி. சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே. கொரோனா வைரஸை பரப்பியவர்கள முஸ்லிம்களே ஆகவே முஸ்லிம்கள் வீணாக எதிர்த்து பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் எதிர்பை சம்பாதிக்காமல் பௌத்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு எதிர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்
என்று இம் மாதம் 13 ஆம் திகதி (13.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த செய்திகள் தொடர்பில் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, உதயன் பத்திரிக்கையின் மாலை பதிப்பாக மின்னிதழ் பதிப்பாக வெளிவரும் சுடர் ஒளி பெயரில் போலி செய்திகள் பரப்புவதாக உதயன் செய்திகளின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் உத்தியோகப்பூர்வ யுடியூப் அலைவரிசையிலும் இது குறித்தான செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதிவில் ”சுடர்ஒளி பத்தினையின் பெயரைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் விசமிகள் தொடர்பில் வாசகர்களும், மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தற்போது ”சுடர் ஒளி” பத்திரிகை மாலைப்பதிப்பாக மின்னிதழ் வடிவில் வெளிவந்து பலரின் ஏகோபித்த ஆதரவையும், மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும் பெற்றுவருகின்றது. இத்தகைய நிலையில் ”சுடர் ஒளி” பத்திரிகையில் வெளியான செய்திகளைப் போன்று போலிவ் செய்திகளை வடிவமைத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் செயற்பாட்டில் விஷமிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் வாகர்களும், மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”
இதற்கமைய சுடர் ஒளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்திகள் அனைத்தும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுடர் ஒளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்திகள் அனைத்தும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Title:சுடர் ஒளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்திகள் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False