ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிகிறதா?

சர்வதேசம் | International

இந்தியாவில் உள்ள ராமேஸ்வர கோயிலில் அமைந்துள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிவதாக ஒரு புகைப்படம் முகநூலில் பகிரப்படுவதினை நாம் அவதானித்தோம்.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

C:\Users\gnana\Downloads\screenshot-www.facebook.com-2020.02.12-16_59_23.png

Facebook Link | Archived Link 

Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ” ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் !! 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவியும் அதிசயத்தை பாருங்கள் .. உலகமே வியக்கும் தமிழர்களின் கட்டிடக்கலை..” என்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி (20.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, கோயிலில் கட்டப்பட்ட 1212 தூண்களின் புகைப்படம் காணக்கிடைத்தது.

C:\Users\gnana\Downloads\screenshot-ta.wikipedia.org-2020.02.12-18_59_16.png

wikipedia Link | Archived Link 

மேலும் மேற்கொண்ட தேடுதலின் போது ராமேஸ்வரம் ஆலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆலய புகைப்படங்களை ஆய்வு செய்த போது இணையத்தில் பரப்பப்படும் புகைப்படம் அதில் காணக்கிடைக்கவில்லை.

C:\Users\gnana\Downloads\screenshot-www.rameswaramtemple.tnhrce.in-2020.02.12-19_22_38.png

Rameswaram temple | Archived link

பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் உண்மையினை கண்டறிய Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி நாம் மேற்கொண்ட தேடுதலில் போது, இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள மண்டு  என்ற இடத்திலுள்ள ஹோஷாங் ஷாவின் கல்லறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று உறுதி செய்யப்பட்டது.

C:\Users\gnana\Downloads\screenshot-www.gettyimages.in-2020.02.12-19_32_14.png

Getty image

குறித்த புகைப்படத்திலுள்ள தூணில் பொறிக்கப்பட்டிருந்த அடையாளம் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும் புகைப்படத்திலும் காணப்பட்டது. இதன் மூலம் பேஸ்புக்கில் ரமேஸ்வர ஆலயத்தில் அமைந்துள்ள 1200 தூண்கள் ஒரே இடத்தில் குவியும் புகைப்படம் என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

C:\Users\gnana\Downloads\screenshot-www.facebook.com-2020.02.12-19_36_35 (1).png

எமது இந்திய தமிழ் பிரிவின் இது குறித்து மேற்கொண்ட உண்மை பரிசோதனையினை தொடர்பாக அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ராமநாதசுவாமி கோவில் உள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவியும் என்று வெளியான புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம்  ஹோஷாங் ஷாவின் கல்லறையில் எடுக்கப்பட்டு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிகிறதா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *