
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ips அதிகாரிகள் என ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

TAMIL பல்சுவை கதம்பம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்
2 அண்ணன்
1 தங்கை
IPS அதிகாரிகளாக…..
சல்யூட் அடித்து பாராட்டுகிறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐” என்று இம்மாதம் 7 ஆம் திகதி (07.09.2020) அன்று பதிவேற்றம் செய்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது ஹரியானாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி பூஜா வாசிஸ்த் உடைய இன்ஸ்டகிராம் கணக்கில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்து அதில் ” வாழ்க்கையை எளிதாக்கும் நபர்கள் ”என பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் பொலிஸ் அகாடமியையும் அடையாளமிட்டிருந்தார் இருக்கிறார்.
மேலும் அதில் இடது பக்கம் இருப்பவர் ஸ்ருதகீர்த்தி சோமவான்சி மற்றும் வலது பக்கத்தில் இருப்பவர் துஷார் குப்தா என அவர்களையும் அந்த புகைப்படத்தில் பதிவிட்டு இருந்தமை காணக்கிடைத்தது.

எமது இந்திய பிரிவினர் இது தொடர்பாக துஷார் குப்தாவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர்கள் மூவரும் ஒரே பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு அவர்கள் சகோதர்கள் இல்லை என தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேலும் நடத்திய சோதனையில் குறித்த மூவரும் தங்களின் இன்ஸ்டகிராம் கணக்கில் தங்களை பற்றி தவறான கருத்து பகிர்வதாக பதிவேற்றம் செய்திருந்த புகைப்படங்களும் கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் என வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் ஒன்றாக ஐபிஎஸ் பயிற்சி பெற்றவர்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.