
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேடையில் உரையாடி கொண்டிருக்கும் போது “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் தனது நிலை தடுமாறியதாக ஒரு காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் கணக்கில் ” நடுங்க வைத்த “அல்லாஹ் அக்பர்”.வார்த்தை.. பேசி கொண்டே இருக்கும் போது “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் நடுங்கிய உலக ரவுடி டிரம்ப்.. ” என்று இம் மாதம் 10 ஆம் திகதி (10.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் குறித்த வீடியோவிலிருந்து ஒரு புகைப்படத்தினை Screenshot எடுத்து அதை Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடலிற்கு உட்படுத்திய போது குறித்த வீடியோ 2016 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.


குறித்த தேடலின் போது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி அன்று டேடன், ஓஹியோ ( Dayton, Ohio ) என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, டிரம்ப் உரையாடும் மேடையிற்கு அருகில் ஒருவர் ஏறுவதற்கு முயற்ச்சித்த வேளையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவினை தற்போது அதன் மேல் ஒலி சேர்க்கையினை சேர்த்து இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றனர்.

மேற்கண்ட வீடியோ கிளெய்ம் பற்றி நமது Fact Crescendo இந்திய பிரிவில் மலையாளம் மற்றும் தமிழ் பிரிவு உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க தமிழ் மற்றும் மலையாளம் இங்கே கிளிக் செய்க
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் நடுங்கினார் டிரம்ப் என கூறப்பட்டு வெளியாகியுள்ள வீடியோ ஒலி சேர்க்கை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:“அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் நடுங்கினாரா டிரம்ப்?
Fact Check By: Nelson ManiResult: False