
INTRO :
ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “சுட்டு விழ்த்தப்பட்ட அமேரிக்கா விமானி கைது செய்யப்பட்டார் என்பதை பலர் ஏற்க மறுத்து வரும் நிலேயில் விமானியின் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது. “என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (04.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த காணொளியில் சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது இந்த காணொளி கடந்த 1991 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட காணொளி என APT News என்ற பேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த காணொளியில் அந்த இராணுவ வீரர் தமது பெயரை Col. David William Eberly என தெரிவித்திருந்தார். ஆகவே நாம் குறித்த தகவலை கொண்டு கூகுள் தேடு தளத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது National Air and Space Museum இணையத்தளத்தில் வெளியாகிருந்த கட்டுரை கிடைக்கப்பெற்றது.
அதில் வளைகுடாப் போரின் போது, ஈராக் மீதான ஆரம்பகட்ட வான்வழித் தாக்குதலில் நான்காவது இரவில், அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். மூன்று இரவுகள் தப்பித்துத் திரிந்த பின்னர், சிரியாவின் எல்லை பகுதியில் சிறைபிடிக்கப்பட்டார். நேச நாடுகளின் மூத்த போர்க்கைதியாக இருந்த அவர், பின்னர் 1991 மார்ச் 5 அன்று விடுவிக்கப்பட்டார் என தெரிவிக்ப்பட்டிருந்தது.
பல இணையத்தளங்களில் இவர் தொடர்பான கட்டுரைகள் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.
axpow | veteran tribute | military times
கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் வழங்கியிருந்த செவ்வியிலும் இது தொடர்பாக அவர் தெரிவித்திருந்தமையும் காணக்கிடைத்தது.
மேலும் சர்வதேச உண்மை சரிபார்க்கும் நிறுவனங்களும் இது தொடர்பாக ஆய்வறிக்கைகள் மேற்கொண்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார் என பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

