
காலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ என்று கூறி பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Moganeswaran Chettiar என்ற பேஸ்புக் கணக்கில் ” முன்னால் அமைச்சர் #அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இறுதியாக கூறி விடைபெற்றது என்ன…?
#கீழ்_காணும்_linkஐ_தட்டுக 👇
https://m.facebook.com/story.php?story_fbid=165316265068766&id=101653828101677” என்று இம் மாதம் 3 ஆம் திகதி (03.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக ஆறுமுகம் தொண்டமானின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்தோம்.
குறித்த ஆய்வின் போது கடந்த வருடம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவினை வழங்குமாறு கடந்த வருடம் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அவரின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் உரையாடிய வீடியோவை edit செய்து தற்போது பதிவேற்றம் செய்துள்ளனர்.
2 நிமிடங்களும் 24 செக்கன்கள் நேர இடைவெளியினை கொண்ட குறித்த வீடியோவில் 1 நிமிடம் 28 ஆவது செக்கனிலிருந்து 1 நிமிடம் 47 ஆவது செக்கன்கள் வரையாக பகுதியினை வெட்டி தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
பேஸ்புக் அமரர் ஆறுமுகத்தொண்டைமான் இறுதியாக பேசியதாக பகிரப்பட்டும் வீடியோ கடந்த வருடம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது எடுக்கப்பட்ட நேரலை என நாம் கண்டறிந்துள்ளோம். குறித்த நேரலைக்கு வீடியோவிற்கு பிறகும் அமரர் ஆறுமுகத்தொண்டைமான் பேசிய வீடியோக்கள் அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
Facebook videos | Archived link
அமரர் ஆறுமுகம் தொண்டமான் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவர் கடந்து வருடம் ஜனாதிபதி தேர்தலின் போது பேசிய வீடியோவை, அவர் மரணித்த போது பேசியதாகக் கூறி பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதன்மூலமாக, மக்கள் மத்தியில் போலியான கருத்தினை பதிவேற்றம் செய்து வருகின்றமை எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இறுதியாக பேசியதாக பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அமரர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ இதுவா?
Fact Check By: Nelson ManiResult: False