
INTRO :
வருகின்ற ஐபிஎல் தொடரில் விளையாட சிகை அலங்காரம் செய்த வனிது ஹசரங்க என ஒரு புகைப்பட தொகுப்பு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ 🔴 கடும் சுகயீனம் காரணமாக இலங்கை அணியின் T20 தொடரிலிருந்து விலகிக்கொண்ட நம்பிக்கை நட்சத்திரம் வாவ்னிந்து ஹசரங்க, வரும் ஐபிஎல் தொடரில் அதிரடியாய் அசத்தி இலங்கை நாட்டுக்கே பெருமை சேர்க்க தயாராகும் வகையில்; தனது சிகை அலங்காரத்தை கொழும்பில் உள்ள பிரபல சலூனில் புதுப்பித்து மகிழ்கிறார்!
பெருமைப்படப்போகும் இலங்கையின் தீவிர ரசிகர்கள் 😵💫😵💫
WoWnindu 👏👏
#T20WorldCup #T20WorldCup2026 #t20cricket #vaanamlk #SLCricket #srilanka🇱🇰 “என கடந்த மாதம் 26 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (26.02.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நடைப்பெற்று வரும் இருபதுக்கு20 உலகக்கிண்ண தொடரின் முதலாம் சுற்று போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக போட்டியில் ஏற்பட்ட தசை உபாதை காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர சுழல் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க, உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியிருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் வருகின்ற ஐபிஎல் தொடரில் விளையாட தமது சிகையினை அலங்கரித்து கொண்டுள்ளார் என இணையத்தில் வைரலாகின்ற குறித்த புகைப்படங்களை ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
அப்போது அது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20 (2025.08.20) திகதி Liyo Salon இல் மேற்கொண்ட சிகை அலங்காரம் என கண்டறியப்பட்டது.
குறித்த சிகை அலங்காரத்தினை அவர்களின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தமை காணக்கிடைத்து.
இந்த உலகக்கிண்ணத்தொடரில் வனிது ஹசரங்கவின் சிகை அலங்காரம் இவ்வாறு தான் காணப்பட்டது.

அவர் குறித்த சிகை அலங்காரத்தில் மாற்றங்கள் மேற்கொண்டுள்ளாரா என தேடிய போது சில தினங்களுக்கு முன்னர் அவர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொண்ட காணொளியும் கிடைக்கப்பெற்றது. அதிலும் அவர் குறித்த சிகை அலங்காரத்தோடு கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வருகின்றன ஐபிஎல் தொடருக்காக சிகை அலங்காரம் செய்த வனிது ஹசரங்க என பகிரப்படும் புகைப்படங்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகை அலங்காரம் என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

