
INTRO:
சில முக்கிய ஊடகங்களின் தவறான செய்தி அறிக்கைகளால் பலர் தவறான தகவல்களை உண்மை என்று கருதுகின்றனர். அவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடக அமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான மற்றுமொரு தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம்.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “தொடர்ந்தும் பொய்யான செய்திகளை பரப்புவதால் ஹிருவுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்து.” என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (30.10.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ABC ஊடக வலையமைப்பில் ஹிரு தொலைகாட்சியானது பொய்யான தகவல்களை வழங்கியது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதா எனவும் ஏனைய பிரதான ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எதுவித செய்திகளும் வெளியிடப்பட்டிருப்பதை எம்மால் காணக்கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, இதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது குறித்து விசாரணை நடத்தினோம்.
ஊடக அமைச்சு
இது தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவிடம் நாம் வினவினோம், ஹிரு தொலைகாட்சிக்கு அவ்வாறான எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதேநேரம் தனது அமைச்சு எந்தவொரு தரப்பினருக்கும் சிவப்பு அறிவித்தல் போன்ற அறிவிப்புகளை வெளியிடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எந்தவொரு ஊடக வலையமைப்பிற்கும் சிவப்பு அறிவித்தல் விடுக்கவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஹிரு தொலைகாட்சி அலைவரிசை
வெகுஜன ஊடக அமைச்சினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதா என்பது குறித்து நாங்கள் ஹிரு தொலைகாட்சியிடம் வினவினோம், அது பொய்யான தகவல் என்றும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தவறான விளம்பரத்தின் பின்னணி
கடந்த காலங்களில், ஹிரு ஊடகம் சில செய்திகளை தவறான முறையில் வெளியிட்டமையினால் ஹிரு தொலைகாட்சியை தடை செய்ய வேண்டுமென பலர் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னரே ஹிரு தொலைகாட்சிக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
குறித்த நிறுவனத்தினால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மத்திய வங்கி 100 பில்லியன் ரூபாவை அச்சடித்ததாகவும், தபால் தினத்திற்கு இணைவாக, ஹரிணி மற்றும் விஜித ஆகியோருக்காக தபால் தலையை வெளியிட்டதாகவும் கூறி வெளியான செய்திகள் மூலம் பலரும் குறித்த நிறுவனத்தற்கு எதிராக குற்றம்சாட்டியிருந்தனர்.
அந்த தவறான செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம்.
பிரதான ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த 04 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒருவர் ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவீர்களா என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத்திடம் கேள்வியொன்றை கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், பொய்யான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த முடியும் என தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய ஊடக வழிகாட்டல்களை, ஹிரு தொலைகாட்சி வலையமைப்பு புறக்கணித்துள்ளதுடன், இது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயலாகும். எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவானது ஹிரு ஊடகத்தை கேட்டுள்ளது. அது தொடர்பிலான கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஹிரு தொலைகாட்சிக்கு அரசாங்கத்தினால் சிவப்பு அறிவித்தல் என பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
ஹிரு ஊடக வலையமைப்பற்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகள் தவறானவை. ஊடக அமைச்சு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் ஏபிசி ஊடக வலையமைப்பு ஆகியன இது பொய்ப் பிரச்சாரம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஹிரு தொலைகாட்சிக்கு அரசாங்கத்தினால் சிவப்பு அறிவித்தலா?
Fact Check By: S.G.PrabuResult: False
