இலங்கைக்கு Paypal சேவை முழுமையாக வழங்கப்பட்டதா..?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO :

இலங்கைக்கு PayPal சேவை முழுமையாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இளைஞர்களினதும், ஆன்லைன் தொழில்முயற்சியாளர்களினதும் நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது. பல தசாப்தங்களாக நிலவி வந்த தடைகள் உடைக்கப்பட்டு, உலகளாவிய பணப்பரிமாற்றத் தளமான பேபால் (PayPal) தனது முழுமையான சேவைகளை இப்போது இலங்கைக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதிலும் (Receive), அந்தப் பணத்தை நேரடியாக எமது நாட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றிக்கொள்வதிலும் (Withdrawal) இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, எமது நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் ஒரு மாபெரும் நகர்வு. வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஃபிரீலான்ஸர்கள், சிறு ஏற்றுமதி வணிகர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் என பல்லாயிரக்கணக்கானோருக்கு இது புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் முறையான அணுகுமுறை இருந்தால், எமது தேசத்தை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நவீன உலகோடு கைகோர்த்து, அந்நியச் செலாவணியை எமது நாட்டுக்குக் கொண்டு வந்து, பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்.

#CFNews ”  என இம் மாதம் 24 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (24.02.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Explainer (விளக்கமளித்தல்)

சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றதை போன்று மீண்டும் இலங்கைக்கு PayPal தனது சேவையினை முழுமையாக வழங்கியுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டோம்.

அதற்கமைய  PayPal சேவையினை முழுமையாக பெற்ற ஒரு கணக்கினையும் இன்று (24.02.2026) இலங்கை பயனாளி ஒருவரின் PayPal சேவையினையும் நாம் ஒப்பிட்டு பார்த்தோம்.

PayPal சேவையினை முழுமையாக பெற்ற பிலிப்பைன்ஸ் கணக்கு 

இலங்கை பயனாளி ஒருவரின் PayPal கணக்கு (24.02.2026)

இரு கணக்குகளையும் நாம் ஆய்வு செய்தபோது, அதில் இலங்கை பயனாளியால் குறித்த கணக்கின் மூலம் பணத்தினை அனுப்புவதற்குரிய வசதி மட்டுமே காணக்கிடைத்தது. இதுவே PayPal கணக்கின் அனைத்து வசதிகளையும் பெற்று நபரின் கணக்கில் பணத்தினை பெறுவதற்கான வசதி உட்பட invoicing, payment links என வணிக ரீதியான அனைத்து வசதிகளும் காணப்பட்டது.

இதன் மூலம் இன்றுவரை இலங்கைக்கு PayPal முற்றாக தமது சேவையினை வழங்கவில்லை என்பது காணமுடிந்தது.

மேலும் இது குறித்து கூடுதல் விளக்கத்தினை பெற அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் உள்ள உதவி chat மூலம் வினவியபோது, இன்னும் இலங்கைக்கு தமது முழுமையான சேவையினை வழங்கவில்லை என தெரிவித்தது.

மேலும் எந்த நாடுகளுக்கு எவ்வாறான சேவையினை தாங்கள் வழங்கி வருகின்றனர் என்பதனை கண்டறிய அவர்களின் இணையத்தில் உள்ள தனிப்பட்ட நாடுகளுக்கான இணைய தளங்கள் மூலம் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இலங்கைக்கான இணையதளத்தினை நாம் ஆய்வு செய்தபோது, அதில் இணைய வழியான கொள்வனவுகள் மற்றும் பண அனுப்புதல் ஆகிய இரண்டு சேவைகள் மாத்திரமே காணக்கிடைத்தது.

www.paypal.com/lk/home | Archived Link

இந்நிலையில் நாம் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் PayPal இணையதளங்களை தனித்தனியே ஆய்வு செய்தபோது, அதில் பல்வேறு பண பரிவர்த்தனை வசதிகள் வழங்கி இருந்தமையை காணக்கிடைத்தது.

www.paypal.com/in/home

www.paypal.com/us/home

இலங்கை மத்திய வங்கி 

இது தொடர்பாக நாம் இலங்கை மத்திய வங்கியினை தொடர்பு கொண்டு வினவியபோது, இலங்கைக்கு முழுமையாக PayPal சேவை வழங்கல் தொடர்பாக உத்தியோகப்பூர்வமான அறிவிப்பினை தற்போது வெளியிட முடியாது என்றும் குறித்த சேவையினை முழுமையாக பெற தாங்கள் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

2026 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதிவரை PayPal தமது சேவையினை முழுமையாக இலங்கைக்கு வழங்கவில்லை என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஊடக செயலாளர் எமக்கு தெரிவித்தார்.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கைக்கு PayPal சேவை இன்று வரை முழுமையாக வழங்கப்பட்டவில்லை என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கைக்கு Paypal சேவை முழுமையாக வழங்கப்பட்டதா..?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *