
பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களை மையமாகக் கொண்டு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை திருடும் செயற்பாடுகள் மோசடிக்காரர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிகின்றது.
அந்த வகையில் தற்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மையை கண்டறியும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
மாலிபன் – மகளிர் தின பரிசு
கேள்வித்தாள் மூலம், நீங்கள் 30000 ரூபாய் பெற வாய்ப்பு கிடைக்கும்
என தெரிவிக்கப்பட்ட ஒரு இணைப்பு வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த இணைப்பு தொடர்பில் உண்மை அறியாத பலர் இதனை வட்ஸ்அப் குழுக்கள் வழியாக அதிகளவில் பகிர்ந்திருந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் நாம் முதலில் மெலிபன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் இணையதள பக்கங்களுக்குச் சென்று ஆராய்ந்த போது மகளிர் தினத்தை முன்னிட்ட எந்தவிதமான பரிசுப் போட்டிகளோ அல்லது அதில் கலந்து கொள்வதற்கு எந்தவிதமான இணைப்புகளையும் கிளிக் செய்யுமாறோ எந்தவித விளம்பரங்களையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும் நாம் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்ட இணைப்பை கிளிக் செய்தவுடன் உட்செல்லும் பக்கத்தில் பலர் கமெண்ட் செய்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.
இருப்பினும் அவ்வாறு கமெண்ட் செய்தவர்களின் பெயர்களை பார்க்கும் போது, மக்களை நம்பவைப்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட பெயர்களில் இந்த கமெண்டகள் வந்திருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
மெலிபன் நிறுவனம்
மேலும் நாம் இது குறித்த உண்மை அறியும் நோக்கில் மெலிபன் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு கேட்ட போது, வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் இந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் மகளிர் தினத்தை முன்னிட்ட அவர்கள் இதுவரை எந்தவித பரிசுப்போட்டிகளையோ அல்லது பணப்பரிசுகளையோ வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் தங்களின் நாமத்தை பயன்படுத்தி மோசடிக்காரர்களினால் மேற்கொள்ப்படும் இவ்வாறான செயற்பாடுகளை நம்பி வாடிக்கையாளர் ஏமாற வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் தங்களின் நிறுவனத்தினால் நடத்தப்படாத இவ்வாறான விடயங்களினால் மக்கள் ஏமாறும் பட்டசத்தில் அதற்கு மெலிபன நிறுவனம் எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்பேற்காது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அவர்களின் நிறுவனத்தினால் ஏதேனும் பரிசுப்போட்டிகள் நடத்தப்படும் பட்சத்தில் அவர்கள் அது குறித்து தங்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் இணையதள பக்கங்கள் ஊடாகவும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வழியாகவும் விளம்பரப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தனர்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)
இது தொடர்பில் நாம் இலங்கை கணிணி அவசர தயார்நிலை குழுவிடம் கேட்டபோது, இதுவொரு மோசடி எனவும், இவ்வாறான பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும். எனவே மக்கள் அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
Also Read:
SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!
SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!
பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் மெலிபன் நிறுவனத்தின் வர்த்தக நாமத்தை பயன்படுத்தி மகளிர் தினத்தை முன்னிட்டு பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்து வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் இணைப்பானது மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடும் நோக்கில் மோசடிக்காரர்களினால் பகிரப்படும் போலியான இணைப்பு என்பது தெளிவாகின்றது.
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், அத்துடன் இலவச டேட்டா, பரிசுப்பொருட்கள் எனபவற்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதனை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பது நாம் எப்போதும் கூறும் ஒரு விடயமாகும்.
மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற போலி தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?
Fact Check By: Suji ShabeedharanResult: False
