ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக பகிரும் காணொளி உண்மையா?

Misleading சினிமா


INTRO :

ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.



தகவலின்விவரம் (What is the claim):

 Facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ஜனநாயகன் படத்திற்கு குடைச்சல் குடுக்கும் ஆளும் பாஜக மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த 

நடிகர் சத்யராஜ் 🔥 “என இம் மாதம் 08 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (08.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குறித்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

குறித்த ‘ஜன நாயகன் படத்திற்கு வந்துள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் தமது கருத்தினை வெளியிட்டுள்ளதாக இணையத்தில் பகிரப்படுகின்ற காணொளி தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, இது குறித்தான செய்திகள் எதுவும் இந்திய ஊடகங்கள்  வெளியாகி இருக்கவில்லை.

ஆகவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, இது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனவர்களும் இரங்கல்களை தெரிவித்து வெளியிட்ட காணொளி என கண்டறியப்பட்டது. 

கரூர் சம்பவத்திற்கு தமது கருத்தை வெளியிட்டிருந்த நடிகர் சத்யராஜ் தொடர்பாக வெளியான செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது. Link  | Link 2 | Link 3 

ஜன நாயகன்’ – மேல்முறையீட்டு மனு 

வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.


இதையடுத்து, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.

தாங்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியம் முறையீடு செய்தது.

இந்நிலையில் குறித்த மனுவிசாரணை இன்று (09.01.2026) மாலை 3.30க்கு தொடங்கியது. அப்போது தனி நீதிபதி உத்தரவு தொடர்பாக கேள்விகளை அடுக்கிய தலைமை நீதிபதி, மறுஆய்வுக்கு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து படநிறுவனம் வழக்குத் தொடரவில்லை. ஆனால் தனி நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எதற்காக உத்தரவு பிறப்பித்தார்? சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜனவரி 21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Link

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக பரவும் காணொளி கடந்த வருடம் கரூர் சம்பவத்தின் போது விஜயிற்கு எதிராக அவர் வெளியிட்டிருந்த காணொளி என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியதாக பகிரும் காணொளி உண்மையா?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *