இது ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட நீர் குழாய் அமைப்பா?

Misleading சமூகம் | Society

பலங்காலத்து விடயங்கள் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பல தவறான தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது ராஜராஜ சோழன் காலத்து அறிவியல் இன்று வரை இலங்கையில் இயங்கி வருவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

YouTube | Archived Link

நம்ப ராஜராஜ சோழன் கட்டுனது என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.12.04 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று பேஸ்புக்கிலும் பலர் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Facebook | Archived LInk

Fact Check (உண்மை அறிவோம்)


மேலுள்ள நீர் அமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில காணொளிகளை நாம் அவதானிக்கும் போது, அந்த இடத்தில் “நீர் குழாய்” (“ජල කරාමය”) என்று சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. 

எனவே நாம் அதன்படி தேடுதலில் ஈடுபட்ட போது, ​​இந்த நீர் குழாய் சூரியகந்த சிங்கராஜ வனப் பகுதியில் அமைந்துள்ள தியான மடத்தில் உள்ள ஒரு நீர் குழாய் என்பதனை அறியமுடிந்தது. 

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து  சிங்கராஜ தியான மடத்தில் உள்ள கல் குழாய் குறித்து பல்வேறு நபர்களால் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன.


அதற்கமைய இது குறித்த மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சிங்கராஜ தியான மடத்தின் விகாராதிபதியிடம் வினவியிருந்தோம்

சிங்கராஜ வன தியான மட அறங்காவலர், வணக்கத்திற்குரிய தெமுவாவத சந்தானந்த தேரர்

இந்த நீர் குழாய் அமைப்பு கட்டுமானப் பணிகளை 2023.01.12 அன்று தாமே ஆரம்பித்ததாக சந்தானந்த தேரர் எம்மிடம் கூறினார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு முதல் இந்த நீர் குழாய் மூலம் மக்கள் பயன்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தாகத்தை தீர்க்க இந்த அமைப்பு உதவியதுடன் பலரின் பாராட்டையும் பெற்றும் வரும் இந்த அமைப்பு குறித்து, பல்வேறு தரப்பினரால் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த குழாய் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படாத காரணத்தினாலேயே இவ்வாறு தவறான பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தேரர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நீர் குழாய், விகாரையிலேயே உள்ள கருங்கல் வெட்டும் இயந்திரத்தின் உதவியுடன், முழுமையாக கல்லால் உருவாக்கப்பட்ட வடிவமைப்பாகும் என்றும் தேரர் குறிப்பிட்டார்.

குறித்த நீர் குழாய் அமைப்பு தொடர்பில் தேரர் அவர்கள் விரிவாக குறிப்பிட்ட காணொளி பின்வருமாறு

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் காலத்தில் இலங்கையில் அமைக்கப்பட்ட நீர் அமைப்பு என தெரிவிக்கப்படும் காணொளி தவறானது என்பதுடன் இந்த நீர் குழாய் அமைப்பின் நிர்மாணப் பணிகள், சூரியகந்த சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள தியான மடத்தில் 2023 ஆம் ஆண்டு அந்த மடத்தின் விகாராதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  2024 ஆம் ஆண்டு முதல் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர் என்பதுவும் கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இது ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட நீர் குழாய் அமைப்பா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *