
INTRO :
பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கையில் மது போத்தலுடன் இருப்பது போன்ற ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “சிறிதரனின் சித்துவிளையாட்டுக்கள்.🤔 #sritharan #TNA #slpolitics #memberofparliment #viralvideo #srilanka @highlight “என இம் மாதம் 02 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு (02.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த காணொளியை நன்கு அவதானித்த போது அதில் இருக்கும் காட்சிகளும் அதல் பயன்படுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனின் குரல் நடை ஒத்துபோகாது இருந்தமை எமக்கு குறித்த காணொளி தொடர்பில் சந்தேகம் எழுந்தது.
மேலும் அந்த காணொளியின் கீழ் பக்கத்தில் த்தில் Google Gemini இன் இலட்சினை இருந்தமை காணக்கிடைத்தது.

ஆகவே குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக எமக்கு சந்தேகம் எழு அது குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
அதனடிப்படையில் நாம் Hive மற்றும் DeepFake-O-Meter போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவிகளை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கியுள்ளமை கண்டறியப்பட்டது.


மேலும் குறித்த காணொளியில் பயன்படுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனின் குரல் கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் வழங்கியிருந்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கையில் மது போத்தலுடன் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என பரவும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி
உருவாக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கையில் மது போத்தலுடன் பகிரும் காணொளி உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

