
இந்திய அளிவில் இஸ்லாமியர்கள் பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததாகவும், அதற்காக மகளிர் ஆணையம் பாராட்டு விடுத்துள்ளதாகவும்,அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளிவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு என்ற இரு தலைப்பில் பேஸ்புக்கில் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Islamic Daily Reminders | Archived Link
Islamic Daily Reminders என்ற பேஸ்புக் பக்கம் கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி (05.09.2019) குறித்த பதிவை பதிவேற்றம் செய்துள்ளது.

மேலும், Sheikh Sheikh என்ற பேஸ்புக் கணக்கில், கடந்த செப்டெம்பர் மாதம் 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ”பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் இந்திய அளவில் இஸ்லாமியர்கள் முதலிடம் மகளிர் ஆணையம் பாராட்டு.?அதிக தான தர்மம் வழங்குவதில்
உலக அளவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு.?” என்ற பதிப்போடு நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பதிவினை பதிவேற்றியுள்ளார்.இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவில் பதியப்பட்ட Comments ஐ நாம் ஆராய்ந்தோம். அதில் பலரும் குறித்த பதிவானது போலியானது, மற்றும் photoshop செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை காணக்கூடியதாக இருந்தது.


மேலும் இது குறித்து ஆய்வினை நாம் மேற்கொண்டவேளையில் கூகுள் தேடுதலில் “பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் “ என்று தேடுதல் செய்த வேளையில், எங்கள் இந்திய தமிழ் பிரிவினரால் குறித்த செய்தி போலியானது என கடந்த ஜுன் மாதம் 24 ஆம் திகதி (24.06.2019) அன்று ஆய்வு மேற்கொண்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தமை எமக்கு காண கிடைத்தது. குறித்த செய்தியை பார்வையிட

மேலும் ”அதிக தான தர்மம் வழங்குவதில்“ என்று கூகுள் தேடுதலில் தேடிய வேளையிலும் எமது இந்திய தமிழ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு செய்தியே முதலாவதாக காணப்பட்டது. செய்தியை படிக்க

இது போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுதான் என்பதை உறுதி செய்ய FotoForensics இணையதள உதவியை நாடினோம். அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட நியூஸ் கார்ட் புகைப்படத்தினை பதிவேற்றியபோது, இதில் போட்டோஷாப் வேலை செய்திருப்பது கண்டறியப்பட்டது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் முஸ்லிம்கள் தொடர்பாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இரு பதிவுகளும் உரிய ஆதாரங்களின்படி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Title:பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள், அதிக தான தர்மம் வழங்குவதில் முதலிடம் இஸ்லாமியர்களா?
Fact Check By: Nelson ManiResult: False
