காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம் என சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த புகைப்படங்களின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Sri Lankan Muslims | Archived Link

Sri Lankan Muslims பேஸ்புக் பக்கத்தில் ”இரத்தம் சிந்தும் காஷ்மீர்!!

இந்தியாவின் காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம் உலக மீடியாவினால் மறைக்கப்படுகிறது. இதனை அதிகம் பகிர்ந்து உலகின் கவனத்தை பெற்றுக்கொடுப்போம்.” என்ற பதிப்போடு ஒரு புகைப்படம் ஒன்று கடந்த 13 ஆம் திகதி (13.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Mujibur Raghuman Congress | Archived Link

Mujibur Raghuman Congress என்பவரும் கடந்த 23 ஆம் திகதி (23.09.2019) “தயவுசெய்து காஷ்மீர் மக்களை விட்டு விடுங்கள். அகண்ட பாரதத்தை விட அமைதியான இந்தியா மேலானது. “ என்ற பதிப்போடு பல படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்துள்ளார்.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிப்பில் உள்ள ஒவ்வொரு புகைப்படங்களையும் தனித்தனியே Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலாவது புகைப்படம்

دين الإنسانية الحق Truth Way | Archived Link

دين الإنسانية الحق Truth Way என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் (14.08.2019) திகதி குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படத்தினை சற்று zoom செய்து பார்த்தால் அதில் மிருகங்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை காணக்கிடைக்கின்றது.

இது மனிதர்கள் அல்ல விலங்குகள் என்று இதன் மூலமாக உறுதி செய்துக்கொள்ள முடியும்.

இரண்டாவது புகைப்படம்

இது 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி காசாவில் இடம்பெற்ற நிகழ்வுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

தாய் சமீரா பாலூசா (34 வயது) உயிர் தப்பிய அவர்களின் 15 மாத குழந்தையான மொகமட் தூக்கிக்கொண்டு அவளின் உயிரிழந்த பெண் குழந்தை ஜவார் பாலூசாவின் இறுதிக்கிரிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். முழு அறிக்கை

முன்றாவது புகைப்படம்

ஜம்பு காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்த தீவிரவாத தாக்குதலில் 3 பொலிஸார் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படமாகும். முழு அறிக்கை

நான்காவது புகைப்படத்தினையும் Google Reverse Image சோதனை செய்த போது,

குறித்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12 ஆம் திகதி இந்தியாவில் ஜம்பு கஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற ஒரு இறுதி கிரிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது.

Twitter | Archived Link

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம் என வெளியான புகைப்படங்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசமா..?

Fact Check By: Nelson Mani

Result: False