ரஷ்யாவை தாக்கிய சுனாமி என பகிரப்படும் காணொளிகள் உண்மையானவையா?

Misleading சர்வதேசம் | International

ரஷ்யாவில் கிழக்கு கம்சட்கா தீவில்  நேற்று (2025.07.30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கின.

இதனைத் தொடர்ந்து இந்த சுனாமி பேரலைகள் தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டவை என தெரிவித்து பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

எனவே அவற்றின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

வரலாற்றில் ஆறாவது மிக மோசமான நிகழ்வு!!

ரஷ்யாவில் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசுபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.07.30) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Claim – 2 

Facebook | Archived Link

ரஷ்யாவை தாக்கிய ஆக்ரோஷ சுனாமி அலைகள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியும் நேற்று (2025.07.30) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்த காணொளிகள் குறித்த உண்மை அறியாத பலரும் இவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலாவது காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது அந்த காணொளியானது இரண்டு வெவ்வேறு காணொளிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

எனவே  நேற்று (30) இடம்பெற்ற சுனாமி தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் இந்த காணொளி வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம். இதன்போது அந்த காணொளியில் முதலாவதாக இணைப்பட்டுள்ள காட்சி எந்த ஊடகங்களிலும் வெளியாகியிருக்கவில்லை என்பது உறுதியானது.

எனவே இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, SUN Newspapers என்ற YouTube தளத்தில் 2017 ஆம் ஆண்டு இந்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை அறியமுடிந்தது.

எனவே நாம் அது குறித்து மேலும் ஆய்வு செய்தபோது குறித்த காணொளியானது, 2017ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் ராட்சத அலைகள் தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் குறித்த காணொளியானது பல்வேறு சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ரஷ்யாவில் ஏற்பட்ட சுனாமி என பகிரப்பட்ட மேற்குறிப்பிட்ட காணொளியில் இறுதியில் இணைப்பட்ட காட்சி தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது குறித்த காணொளியானது நேற்றைய தினம் X தளமொன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

அதில் சுனாமி அலைகள் தற்போது ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் கம்சட்கா தீபகற்பத்தைத் தாக்குகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த காணொளி நேற்றைய தினம் ரஷ்யாவை சுனாமி தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டவை என சில சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.Link

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவை சுனாமி தாக்கிய காணொளி என பகிரப்பட்ட முதலாவது காணொளியானது இரு காணொளிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுடன் அதில் இறுதியாக இணைக்கப்பட்ட காணொளியானது ரஷ்யாவில் நேற்று (30) ஏற்பட்ட சுனாமியுடன் தொடர்புடைய காணொளி என்பது கண்டறியப்பட்டது. 

எனினும் அதில் முதலாவதாக இணைப்பட்டுள்ள காட்சியானது  2017ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையை  ராட்சத அலைகள் தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

Claim  – 2 

அதேபோன்று ரஷ்யாவை தாக்கிய சுனாமி பேரலை என பகிரப்பட்டுள்ள இரண்டாவது காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அதுவும் இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

மேலும் இந்த காணொளிகளை நேற்றை சுனாமி அனர்த்தம் தொடர்பில் வெளியான ஊடக செய்திகளில் காணமுடியவில்லை.

எனவே நாம் குறித்த காணொளிகளின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தினோம்.

இதன்போது இந்த காணொளியில் முதலாவதாக இணைக்கப்பட்டுள்ள காணொளியானது, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கருங்கடலில் நிலைக்கொண்ட புயல் நிலைமை காரணமாக, துருக்கியில் கடலோர பகுதிகளில் கடும் காற்று மற்றும் பாரிய கடலைகளினால் ஏற்பட்ட தாக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது.

அத்துடன் அதே காணொளியில் இரண்டாவதாக இணைக்கப்பட்டுள்ள காட்சியானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யாவின் சோச்சி கடற்கரை பகுதியில் புயல் காரணமாக மேலெழுந்த கடல் அலைகள் கரையைக் கடந்து நிலப்பரப்பிற்குள் வந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது. Link

அதேபோன்று getty images இணையதளத்திலும் இந்த காணொளி 2021 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok | YouTube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவில் நேற்று ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன், 2023 ஆம் ஆண்டு துருக்கியிலும், 2021 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகர கடற்கரை புகதிகளையும் பாரிய கடல் அலைகள் தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title: ரஷ்யாவை தாக்கிய சுனாமி என பகிரப்படும் காணொளிகள் உண்மையானவையா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *